Asianet News TamilAsianet News Tamil

கருங்காலி மாலை அணிவதால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

பல்வேறு சிறப்பு வாய்ந்த கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ம் மாலை தான் கருங்காலி மாலை. இந்த மாலை, அனைத்து கதிர்வீச்சுக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

Wearing an Karungali maalai will give you millionaire yoga.. Which zodiac signs do you know? Rya
Author
First Published Sep 6, 2023, 8:16 AM IST

அபூர்வமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் கருங்காலி மரத்திற்கு மின்காந்த ஆற்றலைச் சேமிக்கும் திறனும், பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்க்கும் சக்தியும் உள்ளது. இந்த மரத்தின் ஆற்றல் மரத்தை சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு இருக்கும். எனவே மிகவும் சக்தி வாய்ந்த மரமாக இது கருதப்படுகிறது.  மேலும் இந்த கருங்காலி மரம் எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி கொண்டது என்றும் கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் இந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையை பயன்படுத்தியே நெல் குத்தி அதிலிருந்து கிடைக்கும் அரிசியை சமைக்க பயன்படுத்தி உள்ளனர்.

பல்வேறு சிறப்பு வாய்ந்த கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்ம் மாலை தான் கருங்காலி மாலை. இந்த மாலை, அனைத்து கதிர்வீச்சுக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆகையால் இந்த மாலை நமது எதிர்மறை சக்தியை போக்கி, நேர்மறை எண்ணங்களை நமக்குள் செலுத்தும் தன்மை கொண்டது. 

உருளியில் தண்ணீர் வைக்கும் போது இதையும் சேர்த்தால்.. வீட்டில் பணமழை கொட்டும்..

முருகனுக்கு மிகவும் உகந்த மரமாக கருதப்படும் கருங்காலி மரம் . எனவே இந்த கருங்காலி மாலை செவ்வாயின் குணங்களைக் கொண்ட மேஷம், விருச்சிகம், மிதுனம் ராசிகளுக்கும்,  மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி, விசாகம், கேட்டை நட்சத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. இந்த மாலைகளை அணிவதால் அதிர்ஷ்டமும் செல்வமும் சேரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

கருங்காலி மரம் ஆற்றல் மிக்கது மட்டுமல்ல, மருத்துவ குணமும் கொண்டது. இம்மரத்தின் பட்டையை அரைத்து சாப்பிட்டால் ரத்த சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. மரத்தின் வேரை குடிநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, சர்க்கரை நோய், உடல் சோர்வு நீங்கும்.

கருங்காலி மரப்பட்டையை ஊறவைத்த நீரை நோய்வாய்ப்பட்டவர்கள் மீது தெளித்து வந்தால், அவர்களில் மாற்றத்தை உணரலாம், கருங்காலியை எரித்து அதன் சாம்பலை விபூதி போல் நெற்றியில் பூசி வந்தால் நல்ல மாற்றம் தெரியும் என்பது ஐதீகம். கருங்காலி மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

கருங்காலி மரத்திற்கு எதிர்மறை ஆற்றலை அழிக்கும் திறன் உள்ளது, இதன் காரணமாக மரம் சிற்பங்கள் மற்றும் பொம்மைகளை உருவாக்கவும், அவற்றை வீட்டில் வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நாம் சிறுவர்களாக இருந்த போது பிரபலமாக இருந்த மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்பட்டது தான். குழந்தைகளுக்கு இந்த பொம்மையை விளையாட கொடுப்பதால் அவர்களை எதிர்மறை சக்தி நெருங்காது என்பதால் இந்த பொம்மைகளை கொடுத்து வந்தனர். 

கருங்காலி இருக்கும் இடத்தில், தெய்வீக சக்தி சற்று அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே பணம் மற்றும் செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம் அல்லது அதன் குச்சிகளை பூஜை அறையில் வைக்கலாம். குல தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற்ற பெருமை கருங்காலி மாலைக்கு உண்டு.

Follow Us:
Download App:
  • android
  • ios