Viruchiga Rasi October Month Rasi Palangal: அக்டோபர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் விருச்சிக ராசியில் கிரகங்களின் நிலை:

சூரியன்: அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை சூரியன் உங்கள் லாப ஸ்தானத்தில் இருப்பார். அக்டோபர் 17 ஆம் தேதிக்கு பிறகு சூரியன் விரய ஸ்தானமான 12 வது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இது பலவீனமான நிலையாக கருதப்படுகிறது.

செவ்வாய்: அக்டோபர் 27 ஆம் தேதி வரை செவ்வாய் விருச்சிக ராசியின் 12 வது வீட்டில் இருப்பார். அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து வெளியேறி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இரண்டு மாற்றங்களும் சாதகமாக கருதப்படவில்லை.

புதன்: புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு மற்றும் சுக்கிரன்: மாதத்தின் முதல் பகுதியில் குரு உங்கள் எட்டாவது வீட்டில் இருப்பார். இரண்டாம் பாதியில் குரு உங்கள் அதிர்ஷ்ட வீட்டின் உச்சத்தில் இருப்பார். அக்டோபர் ஒன்பதாம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் உங்கள் லாப வீட்டில் அமர்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது.

பொதுவான பலன்கள்:

விருச்சக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் கலவையான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். மாதத்தின் முதல் பகுதி சிறப்பாகவும், இரண்டாம் பகுதியை சவால்கள் நிறைந்ததாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.

  • மாதத்தின் முதல் பகுதி: அக்டோபர் 17 வரை சூரியன் உங்கள் லாப ஸ்தானமான 11-வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் முயற்சிக்கு சரியான பலன்கள் கிடைக்கும்.
  • மாதத்தின் இரண்டாவது பாதி: அக்டோபர் 17-க்குப் பிறகு சூரியன் உங்களின் விரய ஸ்தானமான 12-வது வீட்டிக்கு மாறுகிறார். இதன் காரணமாக எதிர்பாராத செலவுகள், அலைச்சல், வேலை சம்பந்தமான மாறுதல்கள் அல்லது நீண்ட தூர பயணங்கள் ஏற்படலாம். வேலைகளில் அதிக முயற்சி தேவைப்படும்.
  • சனிபகவான் உங்கள் வீட்டில் வக்கிர நிலையில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உள் உணர்வை கேட்டு செயல்படுவது நல்லது. 
  • உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் அக்டோபர் 27 வரை 12-வது வீட்டிலும், அதன் பிறகு முதல் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.

வேலை மற்றும் தொழில்:

  • சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அக்டோபர் 17 வரை வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளில் ஆதரவு கிடைக்கும்.
  • அக்டோபர் 17 ஆம் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். தேவையற்ற பணி மாறுதல்கள் அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். சிறிய வேலையை செய்து முடிக்க அதிக முயற்சி தேவைப்படலாம்.
  • புதிய முதலீடுகள் அல்லது புதிய முயற்சிகளை தொடங்குவதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. பழைய வேலைகளையே தொடர்ந்து செய்யவும். உங்கள் அனுபவத்தை நம்பி செயல்படுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஒப்பந்தங்களில் கவனத்துடன் இருங்கள். 
  • குருவின் சாதகமான நிலை காரணமாக மாதத்தின் பிற்பகுதியில் ஓரளவு பலன்களை எதிர்பார்க்கலாம்.

நிதி நிலைமை:

  • மாதத்தின் முதல் பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் வருமானம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
  • புதன் கிரகத்தின் பலவீனமான நிலையாலும், செவ்வாய் மற்றும் சூரியனின் விரய ஸ்தான சஞ்சாரத்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டு நிதி அல்லது பண விவகாரங்களில் கவனமும் வெளிப்படைத் தன்மையும் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள் சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

குடும்ப உறவுகள்:

  • ராகுவின் சஞ்சாரம் காரணமாக வீடு மற்றும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அல்லது மன அழுத்தங்கள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களுடன் உறவு வலுப்படும். ப்ளூட்டோவின் மாற்றத்தால் வீட்டை பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்.
  • உறவுகளில் வெளிப்படையாக பேசுவது தவறான புரிதல்களை தவிர்க்க உதவும். பொறுமையுடன் கையாள்வது அவசியம். திருமணம் முடிவதற்கு சாதகமான காலங்கள் இருந்தாலும், கிரக மாற்றங்களால் சில தாமதங்கள் ஏற்படலாம்.
  • இந்த காலகட்டத்தில் சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நபர்கள் உங்கள் வாழ்க்கையில் வரலாம். ஆனால் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

  • உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சோர்வு, காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியம் பின்னடைவை சந்திக்கலாம். விபத்து அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். 
  • சனியின் தாக்கம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கலாம். மனம் சோர்வடையலாம். எனவே மன அழுத்தத்தை தவிர்க்க யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்.
  • கல்வியைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு அக்டோபர் மாதம் சிறப்பானதாக அமையும்.

பரிகாரம்:

  • சனிக்கிழமைகளில் ஒரு கருப்பு துணியில் இரும்பு ஆணி அல்லது நிலக்கரியை வைத்து கட்டி அதை அரச மரத்தடியில் வைத்து விடுங்கள். இது சனியின் பாதகத்தை குறைக்கும்.
  • செவ்வாய் பகவானால் ஏற்படும் பாதகங்களை குறைக்க முருகப்பெருமானை வழிபடுங்கள்.
  • செவ்வாய் பகவானுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று வருவது அவரது தாக்கத்தை குறைக்க உதவும்.
  • ஏழைகளுக்கு முடிந்த உதவிகள் அல்லது அன்னதானம் செய்யுங்கள்

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)