Vastu Tips: வாஸ்து டிப்ஸ்; செருப்பை பொறுப்பா கழற்றி விடுங்க; கண்ட இடத்தில் போட்டால் கஷ்டம் தேடி வருமாம்!
நம்முடைய வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் எனில் நாம் வாஸ்து சாஸ்திரப்படி சில விசயங்களை செய்ய வேண்டும். சரியான திசையில் சரியான பொருட்களை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். நாம் பயன்படுத்தும் செருப்புகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும். எந்த திசையில் செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் வைத்தால் வாஸ்து படி என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நாம் பயன்படுத்தும் செருப்புகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும். எந்த திசையில் செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் வைத்தால் வாஸ்து படி என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மகாலட்சுமியின் கோபம்:
நம்முடைய வீட்டில் சுபிட்சமும் செல்வமும் நிறைந்திருக்க நாம் சில விசயங்களை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போய் விட்டு வந்த உடனேயே சிலர் காலில் உள்ள செருப்புகளை கழற்றி வீசுவார்கள் அப்படி செய்யக்கூடாது. கண்ட இடங்களில் செருப்புகளை போட்டு வைத்தால் நாம் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
சனிபகவான் கோபம்:
வாஸ்துபடி சில பொருட்களை சில இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். எந்த இடத்தில் செருப்பை போட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. செருப்புகளை அதற்குரிய இடங்களில் மட்டுமே அடுக்கி வைக்க வேண்டும். செருப்புக்கும், சனிக்கும் தொடர்பு உள்ளதால் நாம் கண்ட இடங்களில் போடக்கூடாது. கண்ட இடங்களில் செருப்பை கழற்றி போட்டால் நாம் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
Osteoporosis: ஆஸ்டியோபோரோசிஸ்; எலும்பு பொல பொலன்னு; டக்குன்னு உடையும்; உங்க ஜாதகத்தை செக் பண்ணுங்க!!
எதிர்மறை ஆற்றல்:
நாம் கழற்றி வைக்கும் செருப்பு ஜோடியாக நேராக மட்டுமே இருக்க வேண்டும். தலைகீழாக இருக்க கூடாது. செருப்புகளை வாசலில் நேராக அடுக்கி வைக்க வேண்டும், கலைத்தோ சிதறியோ கிடக்கும்படி வைக்கக் கூடாது. செருப்பை கண்ட இடங்களில் கண்டபடி போட்டு வைத்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதே போல வீடு கட்டும் போதே செருப்பு வைப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வைப்பது நல்லது.
எந்த திசை நல்லது:
சிலர் வெளியில் போய்விட்டு வந்த உடனே தலைவாசலுக்கு அருகில் செருப்பை கழற்றி விடுவார்கள். அப்படி செய்வது தவறான செயல். வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் மட்டுமே செருப்பை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. மேற்கு பகுதியில் மட்டுமே செருப்பு ரேக் வைக்க நல்ல தேர்வு.
ஈசான்ய மூலை:
கிழக்கு, வடக்கு அல்லது, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் செருப்பு ரேக்கை வைக்க வேண்டாம். செருப்புகளை ஒருபோதும் பூஜை அறைக்கு அருகில் வைக்கக் கூடாது. வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையில் செருப்பு ஸ்டேண்ட் வைக்கக்கூடாது. சமையலறை சுவற்றின் அருகில் வைத்தால் நிதி பிரச்சனைகள் வரக் கூடும்.
தடைகள்:
தலைவாசலுக்கு நேராக நாம் செருப்பை கழற்றி விடக்கூடாது இது பணவரவுக்கு தடையாக இருக்கும். வீட்டிற்கு வெளியே உபயோகப்படுத்தும் செருப்புகளை ஒருபோதும் வீட்டிற்குள் போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. வீட்டிற்குள் போட்டுக்கொண்டிருக்கும் செருப்புகளை நாம் பூஜை அறைக்கு அருகில் கழற்றி விடக்கூடாது.
குடும்பத்தில் சண்டை:
கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அதே போல பழைய செருப்புகளை பொக்கிஷம் போல வைத்திருக்கக் கூடாது. பழைய பயன்படாத செருப்புகளை வீசிவிடுவதுதான் நல்லது. அதே போல கிழிந்த அறுந்து போன செருப்புகளை நாம் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அது குடும்பத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்திவிடும். எனவே செருப்புதானே என்று நினைக்காமல் நாம் அதனை பொறுப்பாக கழற்றி பத்திரப்படுத்தினால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.