கோயில் கோபுர கலசத்தின் ரகசியமும்...அதன் அறிவியல் உண்மைகளும் இதோ...

இத்தொகுப்பில் நாம், கோயில் கோபுர கலசங்கள் பற்றியும், அதன் சில அறிவியல் உண்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

the secret of the temple gopura kalasha and its scientific facts

பொதுவாக மன்னர் ஆட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கோயில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசம் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்டது. இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

அதுபோல் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியம் அதில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், வரகு மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றத்காகக் கூறப்படுகிறது. இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போது இருக்கும் அறிவியல் கூறுகிறது. மேலும் இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும் கூட மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலத்திலிருந்து எடுத்தும் பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க:  3 நாட்கள் மட்டுமே லிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி! சோழர்களின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை..

குறிப்பாக இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும். அதன்பின் தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும். எனவே, 12  வருடங்களுக்கு ஒருமுறை "குடமுழுக்கு விழா" என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகின்றது. அதனை இன்றைய காலத்தில் சம்பரதாயமாக மட்டுமே கடைபிடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்? ஆன்மிகக் காரணங்கள் இதோ..!!

அதுபோல் அக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போவதால், மீண்டும் பயிர் செய்வதில் சிரமம். எனவேதான் இந்த உயரமான கோபுரத்தில் நீர் சூழ வாய்ப்பில்லை. தானியங்களை இங்கு சேமித்து வைத்தால் அதனை மீண்டும் எடுத்து பயன்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios