ராகு கேது பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உங்களின் மதிப்பு உயரும். சுபச்செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள்.. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்கலாம். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்கவில்லை என்றாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையைவிட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். எனவே மனம் தளராமல் இருப்பது நல்லது. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீடு, வாகனம் ஆகியவற்றால் செலவு ஏற்படும்.
குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் – மனைவி இடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி செலவும் அதிகரிக்கும். பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. ஆன்மீக பயணத்தில் விருப்பம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீர் கோர்த்துக்கொள்ளாமல் கவனமாக பார்த்து கொள்ளவும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்ல்லும் போது கவனம் தேவை. பூர்வீக் சொத்துக்களில் இருந்து வருமானம் க்குறையலாம். தொழில் மந்தமாக இருந்தாலும், பணவரத்து திருப்தி கரமாக இருக்கும்.
எந்த ஒரு விஷயத்திலும் சாதக பலன்களை பெற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பும் ஏற்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம் :
விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி, உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
