சில தாவரங்களை வீட்டில் வளர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைப்பது இல்லை. அத்தகைய தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வாஸ்து படி வீட்டில் வளர்க்ககூடாத தாவரங்கள்

தாவரங்கள் வளர்ப்பது என்பது ஒரு வீட்டை அழகாகவும், அமைதியாகவும், நல்ல சக்திகளால் நிறைந்ததாகவும் மாற்றக்கூடும். ஆனால் அனைத்து தாவரங்களும் வீட்டில் வளர்ப்பதற்கு ஏதுவானவை அல்ல. வாஸ்து சாஸ்திரத்தின் படி சில தாவரங்கள் நேர்மறை ஆற்றலை தடுத்து, துரதிஷ்டம் அல்லது எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தக்கூடும். உங்கள் வீட்டை நேர்மறையாகவும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர விரும்புபவர்கள் இந்த ஐந்து தாவரங்களை வீட்டில் இருந்து அகற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த தாவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இறந்த அல்லது இறக்கும் தாவரங்கள்

பலர் வாடிக் கொண்டிருக்கும் தாவரங்கள் சரியாகி விடும் என்று எதிர்பார்ப்பில் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். இறந்த அல்லது இறந்து கொண்டிருக்கும் தாவரங்கள் மோசமான அல்லது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இது தோல்வி, இழப்பு அல்லது வளர்ச்சி குன்றியதை குறிக்கலாம். எனவே இறந்து கொண்டிருக்கும் தாவரங்களை வீட்டிலிருந்து அகற்றி விட வேண்டும். உங்கள் தாவரங்களை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். இறந்த பாகங்களை வெட்டி எடுக்க வேண்டும். செடி முழுவதுமாக இறந்து விட்டால் அதை தூக்கி எறிந்து விட வேண்டும்.

பிளாஸ்டிக் அல்லது பருத்தி

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலிச் செடிகள் கவர்ச்சிகரமாக தோன்றலாம். இவை பராமரிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இவை உண்மையான செடிகளை போல ஆற்றலை கொண்டிருக்கவில்லை. ஆன்மீக ரீதியாகவும் அவை வாழ்க்கையை ஏமாற்றும் அறிகுறிகள் ஆகும். இந்தச் செடிகள் தீங்கு விளைவிக்கும் சக்திகளை வெளியிடுவதில்லை. ஆனால் காற்றை சுத்தம் செய்யவோ அல்லது நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கோ இவை உதவுவதில்லை. காலப்போக்கில் இந்த தாவரங்களில் தூசி படிந்து மோசமாக தோன்றலாம். இது அறையின் சுகாதாரத்தை மேலும் மோசமாகலாம். எனவே பிளாஸ்டிக் செடிகள் வளர்க்கக்கூடாது. அதேபோல் பருத்திச் செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவை வீட்டில் துரதிஷ்டத்தையும், எதிர்மறை ஆற்றலையும் கொண்டு வரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த செடிகள் வீட்டில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

பால் சுரக்கும் தாவரங்கள்

வெட்டும் போது பால் போன்ற சாற்றைத் சுரக்கும் தாவரங்கள் துரதிஷ்டமானவை என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த தாவரங்கள் வீடுகளில் நிலையற்ற சூழலையும், அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இது போன்ற தாவரங்களை வீட்டில் வைக்கக் கூடாது. இதற்கு மற்றொரு காரணம் இதிலிருந்து வெளிப்படும் பால் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பால் சுரக்கும் தாவரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது. அதேபோல் போன்சாய் செடிகள் சிறியதாக இருந்தாலும் இது வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது நிதி வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை தடை செய்யலாம். எனவே போன்சாய் செடி வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

படரும் மற்றும் பாசி தாவரங்கள்

சுவர்களில் படர்ந்து வளரும் செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வீட்டின் கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். இது சுவர்களை சேதப்படுத்தி, ஈரப்பதத்தை உள்ளே அனுமதிப்பதால் கட்டிடம் பாழாகலாம். மேலும் பூச்சிகளையும் வீட்டிற்குள் அனுமதிக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி இது போன்ற படரும் செடிகள் சிக்கலான வாழ்க்கையை குறிக்கும் விதமாக இருக்கிறது. நீங்கள் படரும் செடிகளை வளர்க்க விரும்பினால் அவை நேரடியாக வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் அல்லது உட்புற நீரூற்றுகளில் செழித்து வளரும் தாவரங்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் பாசி படிந்து விடும். பாசி என்பது தேக்கத்தின் அறிகுறிகள் ஆகும். எனவே உங்கள் தொட்டியில் பாசி பிடித்திருந்தால் அந்த தாவரங்களை அகற்றி விட வேண்டும். பாசி பிடிப்பது என்பது பணரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ உங்களை செழிக்க விடாமல் தடுக்கலாம்.

பிற தாவரங்கள்

அதேபோல் வீட்டில் ரோஜா செடிகளை தவிர மற்ற முள் செடிகளை வளர்க்க அறிவுறுத்தப்படுவதில்லை. இந்த முள் செடிகள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்குமென வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த முட்கள் வீட்டில் உள்ளவர்களுக்கிடையே பதற்றம் மற்றும் மனக்கசப்பை உண்டாக்கலாம். அதே சமயம் புளி செடியையும் வீட்டில் வளர்க்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என கருதப்படுகிறது. இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் துரதிஷ்டம், மன அமைதியின்மை ஆகியவை ஏற்படலாம். கள்ளிச்செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவற்றில் உள்ள முட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலக்குறைவையும், சண்டையையும் ஏற்படுத்தலாம்.