கணவன், மனைவி சண்டை தீரணுமா? இந்த 3 வாஸ்து டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை வருகிறது என்றால் இந்த மூன்று வாஸ்து குறிப்புகளை பின்பற்றுதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Vastu Tips To Stop Husband And Wife Fight : திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பங்காளியாக மாறிவிடுகிறார்கள். ஆனால், சிலரது திருமண வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதாவது சண்டை, சச்சரவுகள் ஏற்படும். ஆனால் நேரம் இந்த சண்டை சச்சரவுகள் மிகவும் தீவிரமடைந்து இருவரும் பிரியும் செல்லும் அளவுக்கு உள்ளன. பெற்றோருக்கு இடையே தினமும் சண்டைகள் நடப்பதால் குழந்தைகளின் மனநிலை தான் மோசமாக பாதிக்கப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி கணவன் மனைவிக்கு இடையே தினமும் சண்டைகள் வருகிறது என்றால் அதற்கு வாஸ்து குறைபாடு தான் காரணம். இத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை பின்பற்றி வந்தால் மட்டும் போதும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கல் உப்பு
கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரித்தால் கல் உப்பை கொண்டு பரிகாரம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, கல் உப்பை சின்ன சின்ன பாக்கெட்டுகளில் போட்டு அதை வீட்டில் எல்லா மூலைகளிலும் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: 'இந்த' பொருள்களை திறந்து வைப்பவரா நீங்க? தீரா வறுமைக்கு இதான் காரணம்!!
கடவுள் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கடவுள் சிலையை வைப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் வீட்டில் கடவுள் சிலையை வைக்கும் போது ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். அதாவது கடவுளின் சிலையை ஒருபோதும் நேருக்கு நேர் வைக்க கூடாது என்பதுதான். இது குடும்பத்தில் மோதல்களை மேலும் அதிகரிக்க செய்யும். அதுபோல கடவுளின் சிலையை எப்போதுமே வீட்டின் முன்புறம் நோக்கி வைத்திருப்பது தான் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவும்.
இதையும் படிங்க: கையில் பணம் தங்கவில்லையா? இந்த '1' பரிகாரம் பணத்தை வாரி வழங்கும்!
பிரதான கதவை சுத்தமாக வை!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் பிரதான கதவை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் வழியாக தான் நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும். நீங்கள் பிரதான கதவை சுத்தமாக வைக்கவில்லை என்றால் வீட்டில் எதிர்மறை சக்தி பரவும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். எனவே பிரதான கதவை எப்போதுமே பூமியாக வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தமாக வைப்பது ரொம்பவே முக்கியம்.