This Week Rasi Palan: அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் மனதின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். 
  • புதிய மற்றும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். 
  • இந்த எண்ணங்களை சரியான திசையில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். 
  • வாரத்தின் முற்பகுதியில் உற்சாகமான பேச்சுகள் மற்றும் புதிய உறவுகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 
  • தன்னம்பிக்கை, படைப்பாற்றல் ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும். 
  • அறிவுத்தேடல் காரணமாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

ஆரோக்கியம்:

  • உடல் பருமன் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஆரோக்கியத்தை கண்காணிப்பது நல்லது. 
  • உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். 
  • தினசரி யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்வது நல்லது. 
  • தொடர்ச்சியான வேலை உடல் சோர்வுக்கு வழி வகுக்கலாம். 
  • எனவே போதுமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். 
  • ஆரோக்கியம் சீராக இருக்கும்.

நிதி நிலைமை:

  • உங்கள் முயற்சிகளை சரியான திசையில் பயன்படுத்துவதன் காரணமாக நிதி நிலைமை கணிசமாக மேம்படும். 
  • புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகள், நிதி ரீதியாக நன்மை தரும். 
  • ஆரம்பத்தில் பணம் தொடர்பான விஷயங்களில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். 
  • பணம் தேவைப்படும் பொழுது கிடைக்காமல் போகலாம். அதற்காக கடன் வாங்குதல் கூடாது. 
  • வார இறுதியில் பொருளாதார ரீதியாக குறிப்பிடத் தகுந்த லாபத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. 
  • புதிய வருமான வழிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. 
  • நிலுவையில் உள்ள கடன்கள் அல்லது பழைய கடன்களை தீர்ப்பதற்கு நல்ல நேரமாகும்.

கல்வி:

  • கிரகங்களின் செல்வாக்கு காரணமாக கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். 
  • மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. 
  • பொறியியல் மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும். 
  • மாணவர்கள் அட்டவணை மற்றும் சுய ஒழுக்கத்துடன் படித்தால் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியும். 
  • தேவைப்பட்டால் ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகளின் உதவியை நாட தயங்க வேண்டாம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

  • அலுவலகத்தில் இதுவரை உங்களுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலைகள் தற்போது சாதகமாக மாறத் தொடங்கும். 
  • உங்கள் மேல் அதிகாரிகளின் முன் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். 
  • குழு பணி மற்றும் தொடர்பு திறன் அதிகரிக்கும். 
  • தொழில் செய்து வருபவர்கள் லாபத்தைப் பெறுவீர்கள். 
  • உங்கள் பேச்சு மற்றும் செயலில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
  • வேலையில் சிறிய பின்னடைவுகள், தாமதங்கள் ஏற்படலாம். இருப்பினும் அதை சாதுரியமாக முடித்துக் காட்டுவீர்கள்.

குடும்ப உறவுகள்:

  • குடும்ப உறுப்பினர்களில் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். 
  • வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஸ்திரத்தன்மையுடனும் இருக்கும். 
  • குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும், உறவுகளை ஆழப்படுத்தவும் விரும்புவீர்கள். 
  • அதிக எதிர்பார்ப்புகள் அல்லது சண்டைகளை தவிர்க்கவும். 
  • அமைதி மற்றும் புரிதலுடன் செயல்படுவது அவசியம். 
  • கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்:

  • உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வழிபடுவது நல்லது. 
  • திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடவும். 
  • பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி கொடுக்கலாம். 
  • ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)