Today Rasi Palan: செப்டம்பர் 30, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மீன ராசி நேயர்களே இன்று எந்த வேலையை எடுத்தாலும் அவசரமின்றி நிதானம் மற்றும் பொறுமையுடன் செய்ய வேண்டியது அவசியம். திட்டமிட்ட வேலைகள் கால தாமதத்துடன் நிறைவடைய வாய்ப்பு உள்ளது. உங்களின் உள்ளுணர்வு இன்று கூர்மையாக இருக்கும். மனம் சொல்வதை பின்பற்றுவது நல்லது. பழைய சிக்கல்களுக்கு இன்றைய தினம் தீர்வு காண்பீர்கள்.
நிதி நிலைமை:
இன்று எதிர்பாராத வகையில் சிறு தொகை கைக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது. பெரிய நிதி முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. முதலீடுகளில் அதிக கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அனாவசியமான அல்லது ஆடம்பர செலவுகளில் நாட்டத்தை குறைத்துக் கொள்ளவும். பண விஷயங்களில் தெளிவுடனும், நிதானமாகவும் செயல்பட வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று குடும்ப உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். உறவுகளுடன் பேசும்பொழுது வார்த்தைகளில் நிதானம் தேவை. தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். மன அழுத்தத்தினால் சோர்வு அல்லது குழப்பம் ஏற்படலாம். அதை குடும்பத்தினர் மீது காட்டாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரங்கள்:
- தியானம் அல்லது அமைதியான சூழலில் சிறிது நேரம் செலவிடுவது மன தெளிவுக்கு உதவும்.
- குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது செல்வ வளத்தை பெருக்கும். விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது நன்மை தரும்.
- மஞ்சள் நிற ஆடைகளை அணிவது அல்லது மஞ்சள் நிறப் பொருட்களை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.


