Dec 17 Meena Rasi Palan: டிசம்பர் 17, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
டிசம்பர் 17, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
நிதி நிலைமை:
தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாக வருமானம் அதிகரிக்கும். சுப விரயங்கள் நடக்கும். மங்கல நிகழ்வுகள், பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். சிறிய முதலீடுகளுக்கு இன்றைய நாள் ஏற்றது. முக்கிய முடிவுகளை அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசித்த பின் எடுப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இன்பம் கூடும். குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
பரிகாரங்கள்:
காலையில் குளித்துவிட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குவது மனதிற்கு அமைதியைத் தரும். வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்து மனதார வழிபடுங்கள். அம்பிகை வழிபாடு செல்வத்தை அதிகரிக்கும். உங்களுக்குத் தெரிந்த ஏழை மாணவர்களின் படிப்பிற்கு உதவலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.


