- Home
- Astrology
- Zodiac Signs: 2026-ல் இந்த ராசிக்காரங்க Ex கூட மீண்டும் சேந்துடுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?
Zodiac Signs: 2026-ல் இந்த ராசிக்காரங்க Ex கூட மீண்டும் சேந்துடுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?
2026 New Year Rasi Palan: 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Zodiac Signs Get Back With Ex in 2026
2026 ஆம் ஆண்டில் சில கிரகங்களின் முக்கியமான மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. கிரகங்களின் தாக்கத்தால் சிலர் தங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் இணையும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 2026 ஆம் ஆண்டில் பல மாற்றங்கள், பழைய உறவுகளில் மறுபரிசீலனை, கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்கள் ஆகியவை கிடைக்க இருக்கின்றன. முன்னர் முறித்துக் கொண்ட உறவை மீண்டும் பரிசீலனை செய்து முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் இணைய வாய்ப்பு உள்ள நான்கு ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பாகவே அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினர் அல்லது தங்கள் மீது அன்பு வைத்தவர்களிடம் அதிக பாசத்தைப் பொழிகிறார்கள். 2026 ஆம் ஆண்டு இவர்கள் உணர்ச்சி ரீதியான முடிவுகளையும், கடந்த கால உறவுகளை மறுபரிசீலனை செய்யும் அழுத்தத்தையும் பெற இருக்கின்றனர். குறிப்பாக சனியின் தாக்கம் காரணமாக, ஒரு தீவிரமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். அதில் பழைய துணை குறித்த ஏக்கம் அல்லது பழைய துணையை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும் தங்கள் முன்னாள் துணையுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான உறுதியான முடிவையும் எடுக்கக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள். ஆழமான உணர்ச்சிகளுக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எந்த ஒரு உறவையும் எளிதில் மறக்க மாட்டார்கள். விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் மற்றும் பிற கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக 2026 ஆம் ஆண்டில் இவர்கள் ஆழமான சுய பரிசோதனை செய்து கொள்வார்கள், மாற்றத்தையும் விரும்புவார்கள். எனவே வரவிருக்கும் புத்தாண்டில் அவர்கள் பழைய உறவில் உள்ள மாற்றங்களை புரிந்து கொண்டு அல்லது பழைய உறவுகளின் பிணைப்பை ஆழமாக உணர்ந்து புதிய தீவிரமான ஆரம்பத்தை தங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நடைமுறை சிந்தனைவாதிகள் மற்றும் நீண்டகால உழைப்பை நல்குபவர்கள். இவர்கள் உறவுகளில் ஸ்திரத்தன்மையையும், பொறுப்புணர்வையும் தேடுபவர்கள். 2026 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சி காரணமாக மகர ராசிக்காரர்கள் உறவுகள் குறித்த முக்கிய படிப்பினைகளைப் பெற உள்ளனர். இதன் காரணமாக தங்கள் முன்னாள் துணையுடன் இழந்த ஸ்திரத்தன்மையை மீண்டும் பெறவேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு வலுப்பெறக்கூடும். உணர்ச்சிவசப்படுவதை விட முன்னாள் துணையுடன் மீண்டும் சேர்வது நடைமுறை ரீதியாகவும், எதிர்கால ஸ்திரத்தன்மைக்கும் நல்லது என்று முடிவு செய்து மீண்டும் அவர்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இரக்க குணம் மிக்கவர்கள், கற்பனைவாதிகள் மற்றும் கனவுலகில் வாழ்பவர்கள். இவர்கள் மற்றவர்களுடன் உணர்ச்சி ரீதியாக ஒன்றிணைந்து வாழ்வார்கள். 2026 இல் நடக்க இருக்கும் கிரக பெயர்ச்சிகள் இவர்களுக்கு உணர்ச்சி ரீதியான தொடர்புகளை அதிகப்படுத்தலாம். இது கடந்த காலத்தின் மீது ஒருவகையான ஏக்கத்தையும், மன்னிக்கும் மனப்பான்மையையும் அதிகப்படுத்தலாம். இதன் காரணமாக தங்களிடம் இருந்து பிரிந்த துணையை மீண்டும் சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கலாம். குழப்பங்கள் நீங்கி முன்னாள் துணையுடன் ஒரு உணர்ச்சி ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, அவர்களை மன்னித்து உறவை புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

