Today Rasi Palan : செப்டம்பர் 24, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மகர ராசி நேயர்களே இன்று நீங்கள் உற்சாகத்துடனும், ஆற்றல் நிரம்பியவராகவும் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் முடிவுகளில் தெளிவு இருக்கும். மற்றவருடன் இணைந்து செயல்படுவது வெற்றியைத் தரும். பணி சார்ந்த அல்லது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள்.
நிதி நிலைமை:
நிதி ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானம் சீராக இருக்கும். எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளுக்கு இன்றைய நாள் நல்ல அடித்தளமாக அமையும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அவசியமில்லாத விஷயங்களுக்காக பணம் செலவிடுதைத் தவிர்க்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கையில் நல்லிக்கணம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாதாவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிறிய தவறான புரிதல்கள் கூட மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பரிகாரங்கள்:
உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்க சனி பகவானை வழிபடுங்கள். “ஓம் ஷாம் ஷனைச்சராய நமஹ:” என்ற மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. மன அமைதிக்கு யோகா மற்றும் தியானம் செய்வது நன்மை தரும். ஏழை அல்லது வறியவர்களுக்கு அன்னதானம் அல்லது உதவிகள் செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
