Today Rasi Palan : செப்டம்பர் 20, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே இன்றைய நாள் உங்கள் பொறுமைக்கும், கடின உழைப்புக்குமான நல்ல பலன்களைத் தரும் நாளாக அமையும். உங்களின் உறுதியான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு சரியான திட்டமிடலுடன் செயல்படுவீர்கள்.

நிதி நிலைமை:

இன்று உங்களின் நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகி சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். திடீர் செலவுகளுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். சிறு சிறு கடன்களை அடைப்பதால் இன்று உங்களுடைய மன மகிழ்ச்சி அதிகரிக்கும்

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்தும். காதலில் இருப்பவர்களுக்கு புரிதல்கள் வரக்கூடும். உறவுகளுடன் பேசும் பொழுது அமைதியாகவும், வார்த்தைகளில் கவனமாகவும் பேச வேண்டும். நண்பருடன் வெளியே செல்வது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

பரிகாரங்கள்:

இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கவும் தடைகள் நீங்கவும் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி, தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்வது, பசுவிற்கு வாழைப்பழம் கொடுப்பது போன்ற நற்செயல்களை செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.