Today Rasi Palan : செப்டம்பர் 16, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மகர ராசி நேயர்களே பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வெற்றி இப்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது பணியிடத்தில் உங்களுக்கான பதவி உயர்வுகள் கிடைக்கும் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருங்கள் குடும்பத்தினர் நண்பருடன் நேரத்தை செலவிடுங்கள் இது உங்கள் மன அமைதியையும் புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் பணியிடத்தில் சம்பள உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் தேவையற்ற செலவுகளை குறைப்பது சேமிப்பை நிறுத்த உதவும் முதலீடுகளைப் பற்றி சிந்திக்கும் பொழுது நிபுணர்களின் ஆலோசனை பெறுங்கள். கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் தீர்ந்து நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். அது உங்கள் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் மனதிற்குள் இருக்கும் விஷயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது.
பரிகாரங்கள்:
இன்று காலை அல்லது மாலை வேலைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பசு அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள். அம்மன் அல்லது துர்க்கை வழிபாடு நன்மைகளைத் தரும்
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
