Today Rasi Palan : செப்டம்பர் 16, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் கடின உழைப்பின் பலன்களைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்களின் தனிப்பட்ட திறமைகள் இன்று வெளிப்படும். இது உங்கள் பணிக்கு உறுதுணையாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுது நன்மை தரும். பொறுமையாக இருப்பதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரக்கூடும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற அல்லது ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துங்கள் இதன் மூலம் உங்கள் சேமிப்பை உயர்த்த முடியும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை செய்யத் தொடங்குங்கள். கடன் கொடுப்பதையோ, வாங்குவதையோ தவிர்த்து விடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று உங்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் செலவிடுவீர்கள். உங்கள் துணையின் கருத்துக்களை கேட்டு மதித்து நடப்பது உங்கள் உறவில் நல்லிணக்கத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்களின் தலையீடுகளை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரிகாரங்கள்:
சிவாலயங்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பசுக்களுக்கு உணவளிப்பது நன்மை தரும். நீங்கள் செய்யும் காரியம் சிறப்பாக அமைய சனிபகவானை வழிபடுங்கள். இன்றைய தினம் கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து விடுங்கள்
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
