Kala Sarpa Dosha: ராகு கேது.. உங்க ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கா? பரிகாரம் என்ன?
கால சர்ப்ப தோஷம் ஒரு சிலருக்கு திருமண தடை, குழந்தை பிறப்பதில் தடை இருக்கும். அதற்கு ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள். இந்த கால சர்ப்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது. அதற்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
பாம்பின் பிடியில் கிரகங்கள்:
கோச்சாரப்படி ராகு பகவான் தற்போது மீன ராசியிலும் கேது பகவான் தற்போது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். சனி பகவான் தவிர அனைத்து கிரகங்களுமே ராகு கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. இதுவே ஒருவித கால சர்ப்ப தோஷ அமைப்புதான். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
யோகமாகும் தோஷம்:
ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்படும். கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கலாம். இந்த கால சர்ப்ப தோஷ ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில் சிரமங்கள் ஏற்பட்டாலும் பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.
கால சர்ப்ப தோஷம் :
லக்னம் முதல் 12 ஆம் இடம் வரை ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து தோஷம் மாறுபடும். லக்னம்தான் முதல் வீடு. முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும்.
புத்திரபாக்கிய தடை:
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் ஏற்படும். குழந்தை பிறப்பதில் தடையும் தாமதமும் உண்டாகும்.
திருமணத்தில் பாதிப்பு:
ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். இதே போல அமைப்புள்ள ஆணையோ பெண்ணையோதான் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டு அது நிலைக்காமல் போய்விடும்.
சுக்கிரன் பெயர்ச்சி 2024 : கடகத்தில் பயணிக்கும் காதல் நாயகன்.. 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம்!!
புத்திரபாக்கியம் கிடைக்க:
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், அல்லது திருப்பாம்புரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகு, கேதுவை தரிசனம் வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும்.
தோஷ நிவர்த்தி பரிகார தலங்கள்:
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும். வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் ராகு கேது ஒரே உருவத்தில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்திரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
கருடனுக்கு தேன் அபிஷேகம்:
தோஷத்தின் வீரியம் குறைய தன்வந்த்ரி பீடத்தில் உள்ள அஷ்ட கருடாழ்வாருக்கு தேன் அபிஷேகம் செய்து கருட ஹோமமும் அர்ச்சனையும் செய்வது நல்லது. காளஹஸ்தி திருத்தலத்தில் காளத்திநாதர் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது. நாக தோஷத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்வது திருநாகேஸ்வரம். திருப்பாம்பரம் ராகு - கேது நிவர்த்தி தலமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவில் சர்ப்ப தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஆவணி ஞாயிறு நாளில் இங்கு சென்று வழிபடலாம்.