Asianet News TamilAsianet News Tamil

உங்கள் வீட்டில் புறா கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் புறா கூடு கட்டினால் நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Is pigeon nesting in your house a Auspicious  sign or not? What does Vastu Shastra say? Rya
Author
First Published Sep 21, 2023, 2:27 PM IST

வீட்டில் புறா, சிட்டுக்குருவி போன்றவை கூடு கட்டுவது இயல்பான ஒன்று தான். பொதுவாக இந்து மதத்தில் செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்து மதத்தில் பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் தெய்வங்களின் வாகனங்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் முருகனுக்கு மயில், சரஸ்வதி தேவிக்கு அன்னம், விஷ்ணுவுக்கு கருடன், சனி தேவருக்கு காகம், அன்னை லட்சுமிக்கு ஆந்தை, பல உதாரணங்களை சொல்லலாம். எனவே பலரும் பறவைகள் மற்றும் விலங்குகளும் தெய்வங்களுடன் சேர்த்தே வணங்குகின்றனர். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் புறா கூடு கட்டினால் நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

புறாக்கள் லட்சுமி தேவிக்கு உகந்த பறவை என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே புறாக்கள் வீட்டிற்கு வருவதால், அது துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வசிக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும். எனவே, புறாக்களின் கூட்டை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் புறாக்களுக்கு உணவளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் வீட்டிற்கு செழிப்பையும் அமைதியையும் தருகிறது.

நீங்கள் சரியான திசையில் தான் தூங்குறீங்களா? "இந்த" திசையில் தூங்குவது மங்களகரமானது..!

எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி, பறவை கூடு கட்டுவது மிகவும் மங்களகரமானதாகவும் அதிர்ஷ்டமாகவும் கருதப்படுகிறது. எனவே நீங்கள் எந்த கூட்டையும் அழிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பறவைகளின் வருகை வாழ்க்கையின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போவதை குறிக்கிறது.

புறாவிற்கு கூரைகளில் உணவளிக்காமல் வீட்டின் முற்றத்தில் உணவளிக்க வேண்டும். இது ராகு கிரக தோஷத்தை நீக்குகிறது. ஆனால் அதே நேரம் புறா எச்சங்களை சுத்தம் செய்யப்படாவிட்டால், ராகு கிரகத்தின் எதிர்மறையான விளைவுகளை செயல்படுத்தலாம். எனவே அதை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

திருமண அல்லது காதல் பிரச்சனை உள்ளவர்கள் புறாக்களுக்கு உணவளித்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும். இது திருமணம் மற்றும் காதல் தொடர்பான தடைகளை நீக்கும் என்பது ஐதீகம். வாஸ்து படி, உங்கள் தலைக்கு மேல் புறா பறந்தால், உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்று அர்த்தம். வெளியே செல்லும் போது திடீரென உங்கள் வலது பக்கத்திலிருந்து புறா பறந்தால், அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அது துரதிர்ஷ்டம் என்று அர்த்தம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios