Asianet News TamilAsianet News Tamil

குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத யோகம் கிடைக்கப் போகுது.. தொட்டதெல்லாம் வெற்றி தான்..

யோகங்களை வழங்குவதிலும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார்

Guru Vakra Peyarchi 2023 : Guru is going to get unexpected yoga for these zodiac sign people.. All that is touched is success..
Author
First Published Sep 1, 2023, 7:37 AM IST

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த கிரகங்கள் பின்னோக்கி செல்கின்றன. அப்படி கிரகங்கள் பின்னோக்கி செல்லும் போது அது வக்ர காலம் என்று அழைக்கப்படுகிரது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான், செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார்.

டிசம்பர் மாதம் வரை இந்த குரு வக்ர காலம் இருக்கும். பின்னர் டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களில் முதன்மை கிரகமாகவும், சுப கிரகமாகவும் குருபகவான் கருதப்படுகிறார். யோகங்களை வழங்குவதிலும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். அந்த வகையில், இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல அற்புதமான மாற்றங்களை பெற போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் :

ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குருபகவான் வக்ரமடைவதால் தொட்டது எல்லாமே கைக்கூடும். கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற சூழல் மாறும். கடந்த காலங்களில் இருந்த வீண் விரையம், வருமான தடை நீங்கும். இனி வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு இருக்கும். எல்லா கனவுகளும் நனவாகும் அற்புத காலம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

ரிஷபம் :

குரு பகவான் ரிஷப ராசியின் 12-ம் இடமான விரையம், மோட்சம் வெளிநாட்டு பயணம், சொந்த வீடு, துக்கம் போகம் காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். ரிஷப ராசியில் குருவின் பார்வை 4-ம் வீட்டை பார்க்கிறார். எனவே ரிஷப ராசிக்காரர்கள் வீடு, வாகனம் யோகம் வரும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் விரிவடையும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். நன்றாக பணம் சம்பாதித்து அசையா சொத்துக்களை வாங்கி குவிக்கும் நேரம். எவ்வளவு பணம் வந்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற நிலை மாறி, பணத்தை சேமிக்க முடியும்.

இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடப்படுகிறது ஏன் தெரியுமா? 

சிம்மம்;

குரு வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத யோகங்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் காலக்கட்டம் இது. பணியில் இருப்பவர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடியும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சாதக பலன்களையே வழங்கும். மனைவி உடன் இருந்த பழைய கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு நல்ல வரன் கிடைக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களிலும் உங்களுக்கு சாதக முடிவுகளே வரும். இந்த காலக்கட்டத்தில் வலிமை அதிகரிக்கும் என்பதால் பல விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios