வேதங்கள் படி, தந்தை கடவுளுக்கு சமமானவர் என்று சொல்லப்படுகிறது. சனாதன தர்மத்தில் கூட தந்தைக்கு ஒரு சிறப்பு இடமுண்டு. எனவே, தந்தையர் தினத்தன்று எந்த கிரகத்தை வழிபட்டால் அப்பாவின் பாசத்தை பெற முடியும் என்று இங்கு பார்க்கலாம்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூம் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இந்த வருடம் நாளை (ஜூன்.15) ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிள்ளைகளுக்காக செய்த தியாகத்தை கொண்டாடுவது தான் இந்நாளின் நோக்கம். வேதங்களில் கூட தந்தை கடவுளுக்கு ஒப்பானவர் என்று சொல்லப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தில், தந்தைக்கு ஒரு தனி சிறப்பு இடம் உண்டு.

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நபருடன் தொடர்பை கொண்டுள்ளன. அந்த வகையில் எந்த கிரகம் தந்தையுடன் தொடர்புடையது. அந்த கிரகத்தை எப்படி வணங்கினால் தந்தைக்கும் குழந்தைக்கு இடையேயான உறவு வலுப்படும் என்று ஜோதிடம் சொல்கிறது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிடத்தின்படி சூரியன் தான் தந்தையுடன் தொடர்புடைய கிரகம். தந்தை வீட்டை பேணி காப்பது போல, சூரியனும் உலகை பேணி காக்கிறார். உங்களுடைய ஜாதகத்தில் சூரிய கிரகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து, உங்களுக்கும் உங்களது தந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால் உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இடையிலான உறவு கசப்பாகிவிடும். சூரியனின் நிலை வலுவாக இருந்தால் உங்கள் இருவருக்கும் இடையேயான உறவு நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி தந்தையை மதிக்காத நபருக்கு சூரியன் ஆசிகளை வழங்க மாட்டார் என்று வேதங்கள் கூறுகிறது.

ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால், அதை வலுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குளித்த பிறகு சூரிய பகவானுக்கு தண்ணீர் அர்ப்பணிக்க வேண்டும். தானமாக வெள்ளம் கொடுக்க வேண்டும். உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் உங்கள் தந்தையின் அன்பை பெற முடியும் என்று வேதங்கள் சொல்லுகின்றன.

சூரிய கிரகத்தை வலுப்படுத்த தந்தைக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள்:

  • தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பாவுக்கு மஞ்சள் நிறத்தில் ஆடை வாங்கி கொடுத்து, பாதங்களைத் தொட்டு வணங்குங்கள். இதனால் சூரியனின் ஆசி கிடைக்கும்.
  • உங்கள் அப்பாவுக்கு பிடித்த புத்தகத்தை கூட தந்தையர் தினத்தன்று பரிசாக கொடுக்கலாம். ஆனால் அதன் அட்டை மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் சூரியன் மற்றும் குரு கிரகத்தின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.
  • தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பாவுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் இனிப்புகளை வாங்கி பரிசாக கொடுக்கலாம். இது உங்கள் இருவருக்கும் இடையிலான உறவை இனிமையாக்கும்.
  • தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பாவுக்கு தங்கம் அல்லது வெள்ளியில் ஏதாவது ஒரு பரிசை கொடுக்கலாம். ஜோதிடத்தின்படி இந்த இரண்டு உலோகங்களும் உறவு மற்றும் கிரகங்களை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.