- Home
- Lifestyle
- Astrology Tips: குலதெய்வம் ஆசிர்வாதம் இல்லாத ராசி உடையவரா நீங்கள்? இந்த எளிய பரிகாரம் செய்தால் முழு பலன் உண்டு
Astrology Tips: குலதெய்வம் ஆசிர்வாதம் இல்லாத ராசி உடையவரா நீங்கள்? இந்த எளிய பரிகாரம் செய்தால் முழு பலன் உண்டு
Astrology Tips: நீங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு குல தெய்வத்தை வழிபட்டு, இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.

Astrology Tips
ஜாதகத்தின் அடிப்படையில், கிரங்களின் மாற்றம், நட்சித்திர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இதனால் தெய்வத்தின் முழு பலன் இருக்கும். இதன் சுப மற்றும் அசுப நிலைகள் மாறி மாறி வரும். ஆனால், பிறக்கும் போதே குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ ஆசீர்வாதம் இருக்காது..குறிப்பாக, கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தான் குலதெய்வ ஆசீர்வாதம் இருக்காது.
Astrology Tips
கேதுதான் நம்முடைய முன்னோர்களை குறிக்கும் இடம், நவகிரகங்களில் கேது தான் குலதெய்வத்திற்கு காரகத்துவம் ஆன கிரகமாகும். எண் கணிதத்தின் அடிப்படையில் கேதுவின் எண் ஏழு ஆகும். இந்து மதத்தின் அடிப்படையில், ஏழு என்பது மிகவும் முக்கியமானது. ஏழு கடல், ஏழு கண்டம் தாண்டி என்கின்றோம். அதேபோன்று, நம்முடைய முன்னோர்கள் பரம்பரையை குறிப்பிடும்போது ஏழு தலைமுறைகள் என்று குறிப்பிடுகின்றனர்.
Astrology Tips
அதன்படி, ஒருவருக்கு இந்த ராசி நட்சத்திரம் லக்னம் புள்ளி விழுந்த நட்சத்திரம் மற்றும் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று, ''அஸ்வினி, மகம், மற்றும் மூலம்'' இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்திரம் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குலதெய்வ ஆசீர்வாதம் கிடையாது. குலதெய்வ சாபம் இவர்களுக்கு வந்து சேரும் என்று பொருள். குலதெய்வ ஆசீர்வாதம் விட்டுப்போன குடும்பத்தில் தான் இதுபோன்ற நட்சத்திரத்தில் குழந்தைகள் தொடர்ந்து பிறந்து கொண்டே இருப்பார்கள்.
Astrology Tips
இதற்கு நீங்கள் முதலில் குல தெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து, ஒரு துணியில் வைத்து முடிச்சுப்போட்டு வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பிறகு அந்த மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிச்சாக கட்டி, வீட்டில் நில வாசப்படிக்கு உள் பக்கமாக கட்டி வைக்கலாம்.
Astrology Tips
வீட்டில் தீராத கஷ்டங்கள் ஏதேனும் வந்துவிட்டால், அந்த பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவித்து வந்தால், காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மண்ணை எடுத்து உங்கள் நெற்றியில் குலதெய்வத்தை வேண்டி இட்டுக் கொண்டாலே போதும். பிரச்சனைகள் தானாக மறைந்து போகும். எனவே, நீங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு குல தெய்வத்தை வழிபட்டு, பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். வாழ்வில் குலதெய்வத்தின் அருள் இருந்தால், தொட்டதெல்லாம் துலங்கும், மனம் நிம்மதியாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.