Today Rasi Palan : செப்டம்பர் 24, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் செயல்களால் திருப்தி அடைவீர்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உங்கள் சிந்தனை மற்றும் பேச்சுத் திறன் மூலம் பல காரியங்களில் வெற்றியை சாதிப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை தரும்.

நிதி நிலைமை:

இன்று பண வரவு எதிர்பார்த்த வகையில் இருக்காது. மிதமான பண வரவு இருக்கும். செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பணம் சார்ந்த விஷயங்களை கவனத்துடன் கையாள வேண்டும். நிலவையில் உள்ள கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்வீர்கள். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வரும் நாட்களில் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் குறித்த பேச்சுக்கள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரங்கள்:

அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பறவைகளுக்கு தானியங்கள் அல்லது தண்ணீர் வைப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுங்கள். பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.