Today Rasi Palan : செப்டம்பர் 16, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படுவதால் நீங்கள் ஒரு படி முன்னேறிச் செல்வீர்கள். நீங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனதில் உள்ளதை தைரியமாக வெளிப்படுத்துவது நல்லது. இது மற்றவர்களுடான தவறான புரிதலை தவிர்க்க உதவும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையில் இன்று கலவையான முன்னேற்றமே காணப்படும். நீங்கள் எதிர்பார்த்த வருமானம் இன்று கிடைக்காமல் போகலாம். எனவே தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தங்கம், நிலம் போன்ற மிகப்பெரிய முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு முன்னர் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். புதிய வருமான வழிகளை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் மனதிற்குள் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசுவது நல்லது. இதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களிடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த சிறு பிரச்சனைகள் விலகி மீண்டும் நட்பு துளிர்க்கும்.

பரிகாரங்கள்:

உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவன் கோயிலுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவபெருமானை மனதார வழிபடுங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். மஞ்சள் நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.