Dhanusu Rasi October Month Rasi Palangal: அக்டோபர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் தனுசு ராசியில் கிரகங்களின் நிலை:

சூரியன்: அக்டோபர் மாதத்தின் பெரும் பகுதி சூரியன் உங்களின் பத்தாவது மட்டும் லாப வீடுகளில் இருப்பதால் பணியிடத்தில் அதிகாரம், கௌரவம் மற்றும் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும்.

செவ்வாய்: செவ்வாய் பகவான் உங்கள் லாப வீட்டில் இருப்பது சாதகமான நிலையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தைரியம், ஆற்றல் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

புதன்: புதன் பகவான் லாப வீட்டில் இருப்பதால் தகவல் தொடர்பு, வியாபாரம், நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

குரு: மாதத்தின் முதல் பகுதி மிகவும் அனுகூலமாக இருக்கும். குருபகவான் ஏழாவது வீட்டில் இருப்பதால் திருமண வாழ்க்கை, கூட்டுத்தொழில், பொது உறவுகளில் நன்மைகள் கிடைக்கும். இரண்டாம் பாதியில் கலவையான பலன்கள் கிடைக்கும்.

சனி: சனி நான்காவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பதால் குடும்பம், தாயார் அல்லது அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சில சவால்களும், தாமதங்களும் ஏற்படலாம். ராகு மூன்றாவது வீட்டில் இருப்பதால், உங்களுக்கு சாதகமான பலன்களையும், தைரியத்தையும் கொடுக்கும்.

பொதுவான பலன்கள்:

அக்டோபர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கக்கூடிய மாதமாக இருக்கிறது. பெரும்பாலான கிரகங்களின் நிலைப்பாடு உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் நீங்கள் பல துறைகளிலும் முன்னேற்றம் காண முடியும். குறிப்பாக இந்த மாதத்தின் முதல் பகுதியில் கிரகங்களின் நிலை காரணமாக எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம். நிதி ஆதாயங்கள் வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும்.

வேலை மற்றும் தொழில்:

பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. லாபகரமான ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கலாம். சக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் கீழ் நிலையில் உள்ளவர்களுடனான உறவு பலப்படும்

நிதி நிலைமை:

இந்த மாதம் பொருளாதார வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். திடீர் லாபங்கள் வர வாய்ப்பு உள்ளது. மூன்றாவது வாரத்திற்குப் பின்னர் எதிர்பாராத பண வரவுகள் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் லாபத்தை காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம் அல்லது சொத்துக்களை விற்க முடியாமல் தவித்து வந்தவர்கள் நல்லபடியாக விற்று அதன் மூலம் லாபம் காண்பீர்கள்.

குடும்ப உறவுகள்:

திருமண வாழ்க்கையில் கவனத்துடன் இருக்க வேண்டிய மாதமாகும். இந்த மாதம் சில கசப்பான தருணங்கள் வரலாம். முதல் பாதியில் குருவின் அனுகூலம் இருந்தாலும் கோபத்தை தவிர்ப்பது, அனுசரித்து செல்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். காதல் உறவுகளில் மாதத்தின் முதல் பாதியில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். தந்தையுடன் உறவு பலப்படும். பண்டிகை காலத்தில் உறவுகளின் நெருக்கம் அதிகரிக்கும்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல்நல பிரச்சனைகளை கூட அலட்சியப்படுத்த வேண்டாம். கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே போதுமான அளவு ஓய்வு எடுப்பது அவசியம். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்:

  • உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவானை வழிபடுங்கள்.
  • குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றுங்கள். 
  • ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுங்கள். 
  • வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்குங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)