Thulam Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - துலாம்

துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தகவல் தொடர்பு மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். சகோதர, சகோதரிகளின் வழியில் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

நிதி நிலைமை:

சுக்கிரனின் நிலை வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

ஆரோக்கியம்:

குரு பகவானின் நிலை சாதகமாக இல்லாததால் ஆரோக்கியத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலைச்சல் காரணமாக சோர்வு ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியம். சிறு காயம் அல்லது பல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மன அழுத்தம் ஏற்படும் என்பதால் தியானம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

கல்வி:

விடாமுயற்சியுடன் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாரமாகும். புதிய தகவல்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாரம் கூடுதல் முயற்சியை மேற்கொண்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் சுமூகமான உறவு நிலவும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். துணிச்சலுடன் முடிவெடுத்து செயல்பட்டு லாபத்தைப் பெறுவீர்கள். பணி நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுக்கிரனின் செல்வாக்கால் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமணமான தம்பதிகளிடையே அன்னோனியம் அதிகரிக்கும். சனி பகவானின் நிலை காரணமாக துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைப் பேசும்பொழுது நிதானம் காக்க வேண்டும். செவ்வாய் பகவானின் தாக்கம் காரணமாக பேச்சில் ஆக்ரோஷமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். சனிக்கிழமைகளில் ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் அல்லது சமையலுக்கு தேவையானப் பொருட்களை வாங்கி தானம் அளிப்பது தொழிலில் இருக்கும் தடைகளைப் போக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)