இன்றைய ராசி பலனில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளன. பணம், தொழில், குடும்பம், உடல்நலம் என பல விஷயங்கள் குறித்த தகவல்கள் இதில் அடங்கும்.

மேஷம் (அஷ்வினி, பரணி, கார்த்திகை 1): எல்லோரிடமும் அன்பு செலுத்தும் மேஷ ராசி நேயர்களே இன்று பணிவாழ்க்கையில் சிறிய தாமதங்கள் ஏற்படலாம். தேவையான ஆவணங்களை கவனமாக பரிசோதிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பயணத்தில் கவனம் தேவை. தேவையற்ற சண்டைகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் சிறிய கவலை உண்டாகலாம். கவனமுடன் செலவு செய்யவும், பக்தியில் கவனம் செலுத்தவும். எதிலும் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் நாள்.

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2): எதை செய்தாலும் அதில் வெற்றி கனியை சுவைக்கும் வல்லமை உடைய ரிஷபராசி நேயர்களே, வணிகத்திலும் தொழிலும் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிலுள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். சுபநிகழ்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். மனதில் உற்சாகம் நிலவும். சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். இன்று சந்தோஷமும், வெற்றியும் கிடைக்கும் நாள்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): எப்போதும் நடுநிலை மாறாமல் செயல்படும் மிதுனராசி நேயர்களே எதிலும் ஒரு முறைக்கு இருமுறை முயற்சிக்க வேண்டிய நாள். பழைய வேலைகளில் சிக்கல்கள் வந்தாலும் சிந்தனையுடன் தீர்வு காணலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நிதியில் சீராக இருந்தாலும் செலவுகள் கூடும். பொறுமை தேவைப்படும் நாள். நிதானமும், முயற்சியும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): அன்பை மட்டும் விதித்து அன்பை மட்டுமே அறுவடை செய்ய நினைக்கும் கடக ராசி நேயர்களே இன்று உங்களின் நிதிநிலை சீராக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியம் இன்று வெற்றியுடன் முடிவுக்கு வரும். வீட்டில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். ஆன்மீக விருப்பம் நிறைவேறும். சுகாதாரத்தில் சற்றே கவனம் தேவை. இன்று உங்களுக்கு வெற்றி கதவை தட்டும் நாள், அதிர்ஷ்டம் தேடி வரும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1): எதையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி காணும் நாள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும். பயணச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நாள்.

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2): அமைதி ஆனந்தத்தை விரும்பும் கன்னிராசி நேயர்களே பணியில் கவனக்குறைவால் சிக்கல் ஏற்படலாம். சரியான திட்டமிடல் தேவைப்படும் நாள். மன அழுத்தம் இருந்தாலும், நண்பர்களின் உற்சாகம் வெற்றிக்கு உதவும். பழைய கடனை திரும்பப்பெறும் வாய்ப்பு உண்டு. வழிகாட்டல் தேவைப்படும் நாள். வழிபாட்டில் கவனம் செலுத்தலாம். கவனமுடன் செயல்பட்டு பணியாற்றினால் வெற்றி கனியை அசால்டாக தட்டிப்பறித்து இரண்டு லட்டு திங்கலாம். உங்களுக்கு எதிலும் சதாகமான முடிவை கொடுக்கும் நாள்.

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3): அடுத்தவர்களின் எண்ணத்தை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் ஆற்றல் உடைய துலாம் ராசி நேயர்களே புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் வழிகாட்டுதல் வெற்றிக்கு வழிவகுக்கும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை நிலவும் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுப செலவுகள் செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் நல்ல செய்தி நிம்மதியை தரும். சில புதிய பொழுதுபோக்கு திட்டங்களை உருவாக்குவீர்கள். தொழிலில் மேன்மை அடையும். அதிக செலவுகள் ஏற்படும் என்றாலும் அதில் பல்வேறு நண்மைகள் கிடைக்கும். இருந்த போதிலும் பண விஷயங்களில் கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம் (விசாகம் 4, அநுஷம், கேட்டை): அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்படும். பழைய திட்டங்கள் முடிவடையும் புதிய திட்டங்களுக்கு ஆயத்தம ஆவீர்கள். நிதி சார்ந்த வேலைகள் முழுமையாக சீராகும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கணவன்-மனைவி இடையே சிறிய மனக்கசப்பு ஏற்படலாம். அமைதியாக கையாளவும். அமைதியும் பொறுமையும் தேவைப்படும் நாள். சிறிது அமைதி காத்தால் சந்தோஷம் பல மடங்கு அதிகரிக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1): எளிதில் அடுத்தவர்கள் தன்வசப்படுத்தும் ஆற்றல் உடைய தனுசு ராசி நேயர்களே எதிலும் வெற்றி பெறும் நாள். வேலை, தொழில் மற்றும் கல்வியில் புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். அரசியல் தொடர்புகள் பயனளிக்கும். தேங்கி கிடந்த எல்லா பணிகளும் விரைவில் முடியும். நம்பிக்கை தரும் செய்திகள் வரும். ஆனால் உடல்நலத்தில் சிறு சோர்வு ஏற்படலாம். உங்களின் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்கும் நாள். அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் நிம்மதி பல மடங்கு அதிகரிக்கும்.

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): சொந்த காலில் மட்டுமே நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் மகர ராசி நேயர்ளே இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் பணிகளில் ஆதாயம் பெருகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டு. சுய முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயணச் சந்தோஷம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சில விஷயங்களை விட்டுக்கொடுத்தால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3): எளிதில் அன்பிற்கு அடிமையாகும் கும்ப ராசி நேயர்களே நல்ல செய்தி எதிர்பாராமல் வரும். பழைய சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். குடும்பத்தில் சிறு நிம்மதி நிலைத்திருக்கும். செலவுகள் கட்டுப்பாடுடன் இருக்கும். எதையும் அமைதியுடன் செய்தால் அதில் வெற்றியும் லபாமும் கிடைக்கும். உற்சாகம் கொடுக்கும் நாள்.

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): நிதானமாக யோசித்து சரியான முடிவு எடுக்கும் மீன ராசி நேயர்களே புதிய யோசனைகளை செயல்படுத்தலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கைக்கூடும் நாள். அலுவலகம் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் சிந்தனைக்கு மதிப்பளிக்கப்படும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும் அதனை பயன்படுத்தி மகிழ்ச்சி கொள்ளவும். ஆன்மிக பயணம் மற்றும் ஆன்மிக சிந்தனை உற்சாகம் அளிக்கும். வாகன செலவுகள் ஏற்படலாம். உதவி கேட்பவர்களுக்கு உடனே செய்தால் நிம்மதி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடன் உதவி கேட்டு ஓடி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தரும் நாள்.