சந்திர தோஷம்; தண்ணியில கண்டமா? மனக்குழப்பம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?
சந்திரனால் தோஷம் இருப்பவர்களை தண்ணீர் தொடர்பான நோய்கள் அதிகம் பாதிக்கும். பிறந்த ஜாதகத்தில் ராகு கேது உடன் சந்திரன் சேர்ந்திருந்தால் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மனக்குழப்பம் அதிகரிக்கும். திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனால் தோஷம் உள்ளவர்கள் சில பரிகாரங்களை செய்வதால் பாதிப்புகள் கட்டுப்படும்.
சந்திரன்:
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். ஜாதகத்தில் சந்திரன் சாதகமாக வலிமையாக இல்லாவிட்டால் சந்திர தசை காலத்தில் மரண பயத்தை காட்டுவார் சந்திரன். சந்திர தோஷத்தினாலோ, சந்திரன் வலிமையற்ற நிலையில் இருப்பவர்கள் சில பரிகாரங்களை செய்தால் பாதிப்புகள் குறையும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
27 மனைவிகள்:
இரண்டரை நாளுக்கு ஒருமுறை ஒரு ராசியை கடக்கின்ற கிரகம் சந்திரன். ஜோதிடத்தில் சந்திரன் தாய்க்கு காரகர் கிரகமாக இருக்கிறார்
சந்திரனுக்கு தட்சன் தனது மகள்கள் 27 பேரையும் திருமணம் செய்து கொடுத்தார் , அந்த 27 பேரும் தான் நாம் இன்றும் கொண்டாடுகின்ற 27 நட்சத்திரங்கள். தாட்சாயினியின் சகோதரிகள்தான் அந்த 27 நட்சத்திரங்களும், மகாலட்சுமியை சந்திர சகோதரி என்றும் வேதங்கள் கொண்டாடுகிறது. தூய்மையான வெண்மை நிறம் சந்திரனுக்குரிய நிறமாகும்.
பக்கவாதம் யாருக்கு எப்போது பாதிக்கும்? மருத்துவ ஜோதிடம் சொல்லும் பரிகாரம் என்ன?
சந்திரன் சுப கிரகமா?:
குணத்தை பொறுத்தவரையில் சந்திரன் வளர்பிறையில் சுபராகவும் தேய்பிறையில் அசுபராகவும் காட்சி தருபவர் - இவரை ஏன் நாம் தாய் என்று போற்றுகிறோம் என்றால் அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அன்பையும் கோபம் காட்ட வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கூடியவர்.
சந்திரன் தென் கிழக்கு திசையை குறிப்பவர். சந்திரனுக்கு உகந்த ரத்தினம் முத்து, ஒருவர் முத்து மோதிரத்தை அணியும்போது முத்தை வெள்ளியில் அணிந்து கொள்வது மிகவும் உன்னதமான பலன்களை தரக்கூடியது, சந்திர காந்தக் கல்லும் ஸ்படிக மாலையும் சந்திரனுக்கு உகந்த இரத்தினக்கற்களில் ஒன்றுதான். ஜாதகத்தில் சந்திரனுடன் பாவ கிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவர்கள். சந்திரன் உடன் ராகு அல்லது கேது இருந்தாலே, சந்திரன் சனியோடு இருந்தாலோ பரிகாரம் செய்ய வேண்டும்.
வெண்மை நிற பொருட்கள்:
சந்திரனுக்கு உகந்த தானியமாக நெல்லை குறிப்பிடுவார்கள் அதாவது அரிசியை தான், சந்திரனுக்கான பரிகாரமாக ஆதரவற்ற தாயார் வயதில் இருக்கின்ற பெண்களுக்கு சுமங்கலிப் பெண்களுக்கு நாம் இந்த அரிசியை தானமாக வழங்கும் பொழுது சந்திரனுடைய பரிபூரணமான அருள் கிடைக்கும். வெள்ளை அல்லி மலரை சந்திரனுக்கு உகந்த மலர் ஆகும். சிவ ஆலயங்களில் இருக்கின்ற சந்திர பகவானுக்கு வெள்ளை அல்லி மலர்கள் சூட்டி நாம் வழிபடலாம், சிவ ஆலயத்தில் இருக்கின்ற சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் வெள்ளை அல்லி மலர்களை தந்து நாம் வழிபாடு செய்ய சிறந்த நல்ல பலன்களை பெறலாம்.
Sani Peyarchi Palan: சனி திசை; 19 ஆண்டு காலம் வச்சு செய்யும் சனிபகவான்; யாரெல்லாம் கவனம் தேவை?
பால் சாதம்:
பொதுவாக சந்திரனுக்குரிய வாகனம் முத்து விமானம் ஆகும். சந்திரன் தித்திப்பு சுவையே பொதுவாக விரும்புவார் ஆகவே இனிப்பாக இருக்கும் வெள்ளை உணவுகள் அனைத்தும் சந்திரனுக்கான பரிகார பிரசாத உணவுகளாகவே கருத வேண்டும், பால் பாயாசம், பால் பேடா, கல்கண்டு பொங்கல், பாலால் தயாராகின்ற அனைத்து உணவு வகைகளும் சந்திரனுக்குரிய உணவாகவே கருத வேண்டும், அப்படி இல்லை என்றால் பச்சரிசியில் பாலை ஊற்றி வேக வைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி நெய் விட்டு வைத்தால் சந்திரனுக்கான சிறந்த பால் சாதம் பிரசாதம் ஆகும். சந்திரனுடைய உலோகம் ஈயம். சந்திரனுடைய கிரக தேவதையாக பார்வதி வருகிறார். சந்திரனுடைய வஸ்திரமாக வெள்ளை வஸ்திரத்தையே நாம் அளிக்கலாம்.
சந்திரன் பரிகார கோவில்கள்:
தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் சந்திரனுக்கு உரிய பரிகார தலமாகும். சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வர சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி அடையும். சூரியனார் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கின்ற திருமாந்துறை என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு யோக நாயகி சமேத அருள்மிகு அக்ஷய நாத சுவாமி ஆலயமும் சந்திரனுடைய சாபத்தினை நீக்கிய திருத்தலம் இந்த ஆலயத்திற்கு வந்து தானதர்மம் செய்திட சகல விதமான பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்:
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் திருக்கோவில் சந்திரனுக்கான சிறந்த பரிகார ஸ்தலம்.
வளர்பிறை திங்கட்கிழமை அல்லது ரோகிணி ,அஸ்தம் , திருவோணம், ஆகிய தினத்திலும், பவுர்ணமி, திங்கட்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அஸ்த நட்சத்திரம், திருவோண நட்சத்திரம் கூடிய தினத்திலோ அல்லது பௌர்ணமி, திங்கட்கிழமை வருகின்ற தினத்திலோ அல்லது பௌர்ணமி தினத்தில், சந்திர ஹோரையில் வழிபடலாம்.
காஞ்சிபுரம் காமாட்சி:
தலையில் சந்திரனை சூடிய அன்னை - காஞ்சிபுரம் காமாட்சி, ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆகிய திருநாமத்தை உடைய அம்பிகையை வழிபாடு செய்யலாம். திருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதியில், ஸ்ரீ வரகுண மங்கை நத்தம் என்னும் ஊரில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீ விஜயாஸனர் பத்மநாப சுவாமி திருக்கோவில் சந்திரனுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்யலாம். அரிசியை தானமாக தரவேண்டும். வெள்ளை நிற இனிப்புகள் பாலால் செய்த இனிப்புகளை தானமாக தர வேண்டும்.
வெண்மை நிற உடைகள்:
பவுர்ணமி நாளில் அருகில் இருக்கின்ற அம்மன் ஆலயத்தில் ஒரு லிட்டர் பாலை வாங்கி அபிஷேகத்திற்கு அல்லது அந்தப் பாலை சுண்டக்காய்ச்சி சர்க்கரை இட்டு அம்பாளுக்கு நெய்வேத்தியமாக தந்த பிறகு மக்களுக்கு விநியோகம் செய்திட சிறந்த பலன்களை பெறலாம். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிறங்களில் ஆடைகள் அணிந்து கொள்வதும், பெண்கள் வெள்ளை கைக்குட்டையை வைத்துக்கொள்வது, முத்து மோதிரத்தை அணிந்து கொள்வதும், ஸ்படிக மாலையை அணிந்து கொள்வதும், சிறந்த பரிகாரமாகும்.