எண் கணிதத்தின் படி பெண்களே, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்களது குண நலன்களை தெரிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை. இந்து மதத்தை பின்பற்றுவோர் ஜோதிடத்தை எப்படி நம்புகிறார்களோ, அதே அளவுக்கு தான் எண் கணிதத்தையும் நம்புகிறார்கள். எண் கணிதத்தின்படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் மாதத்தை வைத்து அவரது குணநலன்கள், ஆளுமையைப் பற்றி சுலபமாக கணித்துவிடலாம். அந்த வகையில், ஒரு பெண் பிறந்த மாதத்தின் அடிப்படையில் அவளது ஆளுமை, குண நலன்கள் மற்றும் வருங்கால துணையை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று எண் கணிதம் கூறுகிறது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி :

எண் கணிதத்தின்படி, ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பார்களாம். இவர்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே அணிய விரும்புவார்களாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ஒரு விஷயத்தில் எந்த அளவிற்கு ஆசைப்பட்டாலும் அதை சீக்கிரமாகவே வெறுத்து மற்றும் சலித்து விடுவார்களாம். இவர்கள் ரொம்பவே உணர்திறன் உடையவர்கள். ஆனால், இவர்கள் தங்களது தொழில் வாழ்க்கையில் ரொம்பவே லட்சியத்துடன் செயல்படுவர் என்று எண் கணிதம் கூறுகிறது.

பிப்ரவரி :

எண் கணிதத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் புத்திசாலிகள் மற்றும் கூச்ச சுபாவம் உடையவர்கள். ஆனால் ரொம்பவே தந்திரமானவர்கள். இவர்களிடம் அன்பும், பாசமும் நிறைந்திருப்பதால் அதிக நண்பர்களை உருவாக்க முயற்சிப்பார். மேலும் இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் சுதந்திரத்தை விரும்புவதால் இவர்களது சுதந்திரத்திற்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் தான் அவர்களது முதல் எதிரி என்று எண் கணிதம் கூறுகிறது.

மார்ச் :

எண் கணிதத்தின்படி, மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மென்மையான இயல்பை கொண்டவர்கள். இவர்கள் தூய்மையான எண்ணத்தை கொண்டிருப்பதால் பிறரும் உண்மையாக மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ரகசியங்களை மறைத்து வைப்பதில் கில்லாடிகள். இந்த குணத்தால் மற்றவர்கள் இவர்களை சுலபமாக நம்பலாம்.

ஏப்ரல் :

எண் கணிதத்தின் படி, ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் ரொம்பவே மென்மையான குணம் உடையவர்கள் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்களின் செயல் எப்போதுமே வேடிக்கையாக இருப்பதால் பலரும் இவர்களை நேசிப்பார்கள். ஆனால் இவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாகவே இருக்கும்.

மே :

எண் கணிதத்தின் படி, மே மாதத்தில் பிறந்த பெண்கள் பிடிவாத குணம் உடையவர்கள். மேலும் இவர்களிடம் மன வலிமை மற்றும் மன உறுதி இருப்பதால் சீக்கிரமாகவே கோபப்படுவார்கள்.

ஜூன் :

எண் கணிதத்தின் படி, ஜூன் மாதம் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமையை உடையவர்கள். இவர்கள் கலை, படைப்பாற்றல் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். மேலும் இவர்கள் ஊர் சுற்ற விரும்புவார்கள்.

ஜூலை :

எண் கணிதத்தின் படி, ஜூலை மாத பிறந்த பெண்கள் எப்போதுமே ஒற்றுமையாக இருக்க தான் விரும்புவார்கள். இவர்களிடம் நேர்மையான எண்ணம், பிறரை புரிந்து கொள்ளும் குணம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் யாராவது தவறு செய்தால் உடனே மன்னித்து விடுவார்கள். ஆனால் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது.

ஆகஸ்ட் :

எண் கணிதத்தின் படி, ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் தைரியமாக இருப்பார்களாம். இவர்கள் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டார்களாம். இயல்பாகவே சத்தமாக பேசக்கூடியவர்கள். இசை மீது இவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

செப்டம்பர் :

எண் கணிதத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுத்து விட்டு பிறகு அது குறித்து வருந்துவார்கள். ஆனால் இவர்கள் மனதளவில் ரொம்பவே வலிமையானவர்கள். எதற்கும் அஞ்சவே மாட்டார்கள். பிரச்சனைகளை மிக எளிதாக தீர்த்து விடுவார்கள். அதிக நினைவாற்றல் கொண்டிருப்பார்கள்.

அக்டோபர் :

எண் கணிதத்தின் படி, அக்டோபர் மாதம் பிறந்த பெண்கள் அதிக புத்திசாலிகள் மற்றும் அதிகமாக பேச விரும்புவார்களாம். இவர்கள் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம். இவர்களிடம் பிறர் கடினமாக பேசினால் அது குறித்து ரொம்பவே வேதனைப்படுவார்கள்.

நவம்பர் :

எண் கணிதத்தின் படி, நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் தங்களை குறித்த ரகசியத்தை வெளியே ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள். தங்களது வேலையில் பர்ஃபெக்டாக இருப்பார்கள். பிறர் மத்தியில் இவர்கள் தனித்துவமாக தெரிவார்கள். ஆனாலும், எல்லோருக்கும் இவர்களை ரொம்பவே பிடிக்கும் என்று எண் கணிதம் கூறுகிறது.

டிசம்பர் :

எண் கணிதத்தின் படி, டிசம்பர் மாதம் பிறந்த பெண்கள் லட்சியம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறரிடம் ரொம்பவே அன்பாக பேசுவார்கள். எந்தவொரு விஷயத்தையும் செய்யும் முன் சிந்தித்து செயல்படுவார்கள். ஆனாலும் இவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல என்று எண் கணிதம் கூறுகிறது.