கின்னசில் இடம்பிடித்த ‘சுஷி மொசைக்’ உணவு

First Published Oct 6, 2016, 6:54 AM IST
Highlights


நார்வே நாட்டில் உள்ள கால்பந்து கிளப்பின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், 608 அடி நீளம் கொண்ட ‘சுஷி மொசைக்’ உணவு உருவாக்கப்பட்டது.

நார்வே நாட்டில் உள்ள போடோ கிளிம்ட் கால்பந்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் இந்த ஆண்டோடு நிறைவு பெருகிறது. இதையொட்டி போடோ நகரில் உள்ள ஆஸ்ம்ரியா கால்பந்து அரங்கில் கிளிம்ட்கால்பந்து அணிக்கும், பாரன் கிளப் அணிக்கும் இடையே நேற்று முன்தினம் போட்டி நடக்க இருந்தது. அப்போது, உலகின் மிகப்பெரிய சுஷி மொசைக் (ஒரு வகையான கேக்) உருவாக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக ஸ்டாக்ஹோம் நகரில் சுசி ஸ்வீட் கடை நடத்தி வரும் தலைமை சமையல்கலை நிபுனர் லியானர்டோ பிகுர்டோ அகுலர் தலைமையில் 4 சமையல் நிபுனர்கள் சேர்ந்து சுஷி மொசைக்  உருவாக்க திட்டமிட்டு அதை வடிவமைத்தனர்.

இந்த மொசாக் சுசி ஸ்வீட் செய்வதற்காக 800 கிலோ சல்மான் மீன், 400 கிலோ அரசி, 200 கிலோ வினிகர், 480 கிலோ வெள்ளரி, 10 கிலோ பூண்டு ஆகியவை சேர்த்து இந்த சுஷி மொசாக் 56.50 சதுரமீட்டர்(608 அடி நீளம்)நீளத்தில் உருவாக்கப்பட்டது.

608 நீளம் கொண்ட சுஷி மொசாக் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட உடன் கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்களுக்கு இந்த உணவுபகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதற்கு முன்  கடந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி புகி நகரில் 451 அடி நீளம் கொண்ட சுஷி உருவாக்கப்பட்டதை சாதனையாக இருந்தது அதை இவர்கள் முறியடித்தனர். இதையடுத்து கின்னஸ் அதிகாரிகள் லியானர்டோ குழுவுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

 

click me!