விலகியது 4000 ஆண்டுகள் மர்மம்.. கிசா பிரமிடு எவ்வாறு கட்டப்பட்டது?

By Ramya s  |  First Published May 18, 2024, 12:36 PM IST

4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் புகழ்பெற்ற கிசா பிரமிடு உட்பட 31 பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்ற பழங்கால மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


எகிப்து என்றாலே நமக்கு பிரம்மாண்ட பிரமிடுகள் தான் நினைவுக்கு வரும். எனினும் இந்த பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே உள்ளது. இந்த நிலையில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் புகழ்பெற்ற கிசா பிரமிடு உட்பட 31 பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்ற பழங்கால மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரமிடுகள் வேற்று கிரக வாசிகளால் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை வேற்றுகிரகவாசிகளால் கட்டப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

நார்த் கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பில் பாலைவன மணல் மற்றும் விவசாய நிலங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் நைல் நதியின் கிளையில் இந்த பண்டைய பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த நதிக்கிளை தற்போது மண்ணுக்குள் மறைந்துள்ளது.

Latest Videos

undefined

பண்டைய எகிப்தியர்கள் பிரம்மாண்ட பிரமிடு கட்டுமானத்திற்கு தேவையான பிற பொருட்களை கொண்டு செல்ல ஒரு நீர்வழியை பயன்படுத்தினர் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்து வருகின்றனர். இருப்பினும், இந்த நீர்வழிப்பாதையின் சரியான இடம் மற்றும் தன்மை இப்போது வரை சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட "அஹ்ரமத்" என்ற நைல் நதிக்கிளை, சுமார் 64 கிலோமீட்டர் (39 மைல்) நீளம் கொண்டது, தொழிலாளர்கள் மற்றும் பிரமிடுகளின் தளங்களுக்கு கட்டுமானப் பொருட்களுக்கான போக்குவரத்து நீர்வழியாகப் பயன்படுத்தப்பட்டது" என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மறைக்கப்பட்ட கிளையை வரைபடமாக்க ஆராய்ச்சியாளர்கள் ரேடார் செயற்கைக்கோள் தரவு, புவி இயற்பியல் ஆய்வுகள் மற்றும் மண் கோரிங் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தினர்.

இந்த ஆய்வின் ஆசிரியார்களில் ஒருவரான எமான் கொனிம் இதுகுறித்து பேசிய போது, "எகிப்தில் எண்ணற்ற பள்ளத்தாக்கு கோயில்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே, அஹ்ரமத் கிளையின் ஆற்றங்கரையில் விவசாய வயல்களுக்கும் பாலைவன மணலுக்கும் அடியில் இன்னும் புதைக்கப்பட்டிருக்கலாம். இந்த ஆற்றின் கிளை வறண்டு போய்விட்டது. " என்று தெரிவித்தார்.

click me!