‘இலங்கையில் புத்த மதத்துக்கே முன்னுரிமை’... மாற்றமில்லை என்கிறார் அதிபர் சிறிசேனா

First Published Oct 23, 2016, 8:12 AM IST
Highlights


இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் புத்த மதத்துக்கு புதிய அரசியலமைப்புச்சட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படாது என அதிபர் சிறிசேனாதெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசியலைப்புச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அதில் அனைத்து மதங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்றதாக புதிய அரசியலமைப்பு சட்டம் இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் முக்கியத்தும் வழங்கக்கூடாது என தமிழர் அமைப்புகள் உள்ளிட்ட பல சிறுபான்மை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அதற்கு ஏற்றார் போல், அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் , புதிய அரசியலைமைப்பு சட்டத்தில் புத்த மதத்துக்கான முக்கியத்துவம் நீர்த்துப்போகும் விதமாக அரசு செய்ய உள்ளது என பிரசாரம் செய்து வந்தது.

இது குறித்து திரிகோனமலை நகருக்கு நேற்று வந்திருந்த அதிபர் சிறிசேனாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ அரசியலமைப்புச் சட்டத்தில் புத்தமதத்தின் முக்கியத்துவம், முன்னுரிமை கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து இருக்கிறது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் புத்த மதத்துக்கான எந்த முன்னுரிமையும் குறைக்கப்படாது. அதேசமயம், எந்தவிதமான இறுதிமுடிவும் இதுவரை எடுக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் விக்கிரமசிங்கே, “ இலங்கையில் புத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள எந்த அமைப்புகளும் எதிர்க்கவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த புதிய அரசியலமைப்புச்சட்டம் அடுத்த ஆண்டு தொ

click me!