ஃப்ளாஸ்க்கில் இருக்கும் விரும்பத்தகாத நாற்றத்தை நீக்குவது எப்படி? பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் கொண்டு எளிதாக சுத்தம் செய்யும் முறை.
நம் அன்றாட வாழ்வில் தவறாது பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஃப்ளாஸ்க் தான். குளிர் காலத்திலும் சரி, தொண்டக்கு கதகதப்பு தேவைப்படும் போதும் சரி, வெந்நீர் சேமித்து வைக்கும் ஃப்ளாஸ்குகள் தான் நிவாரணமே ! ஆனால் பெரும் நிவாரணம் தரும் இந்த ஃப்ளாஸ்குகளே சில சமயம் பெரும் தலைவலியையும் ஏற்படுத்தி விடுகிறது.
அலுவலக நாளை மோசமாக்கும் ஃப்ளாஸ்க் :
ஆம் ! சற்று யோசித்து பாருங்களேன். வீட்டிலிருந்து அலுவலகத்து வந்துவிட்டீர்கள். ஃப்ளாஸ்கில் சூடான டீயோ, காஃபியோ, ஏன் வெந்நீர் எடுத்து வந்தீர்கள் என்றே வைத்து கொள்வோம். அலுவலகத்திலிருக்கும் உங்கள் கேபினில் அமர்ந்து ,ஃபைல்களை அடுக்கி வைத்துவிட்டு, சற்றே ஆசுவாசமாக உங்கள் கோப்பையில் தேநீரை ஊற்ற ஃப்ளாஸ்கை திறக்கும் போது, விரும்பதகாத நாற்றம் அடித்தால் ! முந்தின நாள் நீங்கள் எடுத்து வந்த தேநீரின் வாடை வந்தால் போதும். அந்த நாளின் ஆரம்பமே விரும்பத்தகாததாக தான் இருக்கும்.
இதையும் படியுங்கள்: எண்ணெய் பிசுபிசுப்பான கிச்சன் டைல்ஸ்.. ஒரு நிமிடத்தில் பளபளனு மாற டிப்ஸ்
ஃப்ளாஸ்க்கை சுத்தம் செய்வதில் ஏற்படும் தலைவலி !
எத்தனை முறையுள்ள நுரை வரும் சோப்புகள், டிஷ் வாஷர் ஜெல்களை பயன்படுத்தினாலும், ஃப்ளாஸ்க்குக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிட்டதா? இப்போது ஆசுவாசத்தை கெடுக்கும் அவ்வாடையிலிருந்து விடுதலையா என்று கேட்டால், இப்போது கொண்டுவரும் அந்த ஃப்ரெஷ்ஷான தேநீருடன் அந்த சோப்பின் வாசனையும் சேர்ந்தே வரும். இதற்கு தீர்வுதான் என்ன என்று இணையத்தில் தேடாத வீட்டம்மாக்களும் பேச்சிலர்சுக்கும் இருக்கமாட்டார்கள்.
ஃப்ளாஸ்க்கை எப்படி சுத்தம் செய்வது?
அப்படிதான் ஃப்ளாஸ்க்கில் ஏற்படும் இந்த நாற்றத்தை நீக்குவதற்கு மிகவும் சிறப்பான தீர்வு ஒன்றும் இணையத்தில் கிடைத்துள்ளது. ஃப்ளாஸ்க்கை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருள்களெல்லாம் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும், கோப்பையில் சிறிது தண்ணீரும் மட்டுமே. இவற்றை உங்கள் ஃப்ளாஸ்கில் போட்டு நன்றாக குலுக்கி விட்டு , 15 முதல் 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள். பிறகு , தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அழுக்குகளுடன், தேவையில்லாத அந்த விரும்பத்தகாத வாடையும் நுரை போல வெளியேறிவிடும்.
இதையும் படியுங்கள்: வெந்நீர் வைச்சு ஸ்டீல் பாட்டில் இப்படி இருக்கா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!
நிமிடங்களில் தீர்வு ! இனி டென்ஷன் வேண்டாம் !
அடிக்கடி உங்கள் ஃப்ளாஸ்க்கை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். ஃப்ளாஸ்கில் உள்ள அழுக்கும், ஆசுவாசத்தை குலைக்கும் அந்த விரும்பத்தகாத வாடையும் போய்விடும். அடுத்து என்ன , அந்த ஃப்ளாஸ்கில் குடிக்கும் தேநீரும் ஃப்ரெஷாக இருக்கும், அலுவலகத்தில் நீங்களும் டென்ஷனில்லாமல் ஃப்ரெஷாக இருக்கலாம். நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் இந்த சூப்பர் ஹேக்கை தொடர்ந்து செய்து பாருங்கள். காலையிலேயே தலைவலியும் தேவையில்லை, டென்ஷனும் வேண்டாம். ஃப்ரெஷாக இருக்கலாம் !
இதையும் படியுங்கள்: கேஸ் பர்னர் அழுக்கா இருக்கா? 1 ஸ்பூன் பேக்கிங் சோடால இப்படி க்ளீன் பண்ணுங்க!!