புழல் ஜெயில் பிரியாணி சமைக்கும் விடியோ!

Oct 5, 2018, 4:59 PM IST

சென்னையிலுள்ள புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை மேற்கொள்வது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து சோதனை நடத்தப்பட்ட போது கட்டில்கள், டிவிகள், சமையல் பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

"

இந்த நிலையில், புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது ஓராண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், செப்டம்பர் மாதச் சோதனைக்குப் பின்னர் எடுக்கப்பட்டது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.