தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நிலவிய வெப்பத்தின் தாக்கம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோடை காலம் தொடங்கியது முதல் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
undefined
பெங்களூருக்கு மக்களுக்கு நற்செய்தி... கொட்டப் போகுது கனமழை... சுட்டெரிக்கும் வெயிலுக்கு குட்பை!
இந்தியாவில் மட்டும் தான் இந்த நிலையா என்றால் இல்லை என்பதே பதில். ஆசிய நாடுகள் அனைத்திலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா முழுவது கடுமையான வெப்ப அலையுடன் போராடி வருகிறது. பிலிப்பனைஸ் நாட்டில் அதிகபட்சமாக 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் வீடுகளை வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கம்போடியாவில் இந்த ஆண்டு, 170 ஆண்டுகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க இந்த 6 மாவட்டங்களில் ஊத்தப்போகும் மழை.. எப்போது தெரியுமா?
வடக்கு தாய்லாந்தில், சில பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் உள்ளது, அதே நேரத்தில் தலைநகர் பாங்காக் மற்றும் பெருநகரப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை காணப்பட்டது. வழக்கமாக பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து மே இறுதி வரை நீடிக்கும் இந்த ஆண்டு கோடைக்காலம் கடந்த ஆண்டை விட 1-2C (1.8-3.6F) வெப்பமாக இருக்கும் என்றும், சராசரியை விட மழை குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நிலவிய வெப்பத்தின் தாக்கம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா தொடங்கி வியட்நாம் வரை சராசரியாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது என்றும் உலகில் ஆசிய நாடுகளில் காணப்படும் வெப்பத்தை விளக்கும் வகையில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நிலவிய வெப்பத்தின் தாக்கம்...
சும்மா கொளுந்து விட்டு எரியுது.
இந்தியாவில் தொடங்கி வியட்நாம் வரை சராசரியாக 38°C வெப்பநிலை பகலில் பதிவாகிறது.. அதிக பட்ச வெப்பநிலை 45°C தொட்டது. pic.twitter.com/1bMLDOODoQ