வருடம் முழுவதும் 25 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்!

By SG BalanFirst Published May 2, 2024, 7:12 PM IST
Highlights

பெண்களின் தோற்றம் மற்றும் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் உல்லாச அணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என வடகொரியாவில் இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். கிம் ஜாங்-உன் ஒவ்வொரு ஆண்டும் 25 கன்னிப் பெண்களை தனது உல்லாச அணிக்காகத் தேர்வு செய்கிறார் என்று யோன்மி பார்க் கூறியுள்ளார்.

பெண்களின் தோற்றம் மற்றும் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் இந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ள அவர், கிம்மின் உல்லாச அணிக்காக இரண்டு முறை தான் தேடப்பட்டதாகவும் தனது குடும்ப நிலை காரணமாக தன்னைத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் ஒவ்வொரு வகுப்பறையையும் பார்வையிடுகிறார்கள். சில அழகான பெண்களைக் கண்டுபிடித்தவுடன், அவர்கள் செய்யும் முதல் விஷயம் அவர்களின் குடும்ப நிலை மற்றும் அவர்களின் அரசியல் நிலையை பார்ப்பதுதான். வட கொரியாவில் இருந்து தப்பியோடிய அல்லது தென் கொரியா அல்லது பிற நாடுகளில் உறவினர்களைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட எந்தப் பெண்களையும் அவர்கள் தவிர்க்கிறார்கள்" என யோன்மி பார்க் சொல்கிறார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிரிட்ஜ் பூஷனுக்குப் பதில் அவரது மகனுக்கு சீட் கொடுத்த பாஜக!

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர்கள் கன்னிப்பெண்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் யோன்மி கூறுகிறார். "சோதனையின் போது, ஒரு சிறிய குறைபாடு இருந்தால் கூட அந்தப் பெண்ணை விட்டுவிடுகிறார்கள். கடுமையான சோதனைக்குப் பிறகு, வட கொரியா முழுவதிலும் இருந்து ஒரு சில இளம் பெண்கள் மட்டுமே பியாங்யாங்கிற்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் ஆசைகளை பூர்த்தி செய்வதே அவர்களின் ஒரே வேலை" என்று யோன்மி பார்க் தெரிவித்துள்ளார்.

இந்த உல்லாச அணி குழு மூன்று தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மசாஜ் செய்வதற்கானது. மற்றொன்று பாடல்கள் மற்றும் நடனங்களுக்கானது. மூன்றாவது குழுவினர் சர்வாதிகாரி மற்றும் பிற ஆண்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டும். மூன்றாவது குழுவில் உள்ளவர்கள் ஆண்களை எப்படி மகிழ்விப்பது என்பதைக் கட்டயாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யோன்மி பார்க் சொல்கிறார்.

மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அவருக்குக் கீழ் உள்ள ஜெனரல்கள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த நியமிக்கப்படுகிறார்கள். இந்த உல்லாசக் குழுவில் உள்ளவர்களின் வயது இருபதுகளின் மத்தியை அடையும்போது அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சிலர் அரசியல்வாதிகளின் மெய்க்காப்பாளர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் யோன்மி குறிப்பிடுகிறார்.

இந்த உல்லாசக் குழு வடகொரியாவில் 1970 களில் கிம் ஜாங்-உன்னின் தந்தை இரண்டாம் கிம் ஜாங்க்கு முந்தைய காலத்தில் இருந்தே இருந்துவருகிறது என்றும் பார்க் தெரிவிக்கிறார். கிம் ஜாங் உன்னின் தந்தை 2011ஆம ஆண்டு 70 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர் லாரிகள்!

click me!