Viral :  ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Published : Sep 17, 2022, 11:09 AM IST

தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது
 

03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
Read more