Jan 25, 2025, 8:33 PM IST
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வது அவசியம். முக்கியமாக, பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளுக்கு ஆண்டுதோறும் அதிகாரிகளால் சொத்துகளை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 60% அதிகாரிகள் மட்டுமே சொத்து கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.