Jan 21, 2025, 4:59 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.இந்த நிலையில், செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.