
செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா அவர்கள் பேசுகையில் ...தமிழ் மொழிக்கு நாம் எல்லாரும் துணை நிற்க கூடியவர்கள் தான் . நம்மை பொறுத்த வரை நம் தமிழ் மொழிதான் நமக்கு பிரதானம் . இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது . மேலும் விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு ...விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எங்கள் வீட்டிற்கு வருபவர் இல்லை....அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பில் இருந்தே வருவார் அதனால் தான் நான் சொல்லுவேன் அவர் எங்கள் வீடு பிள்ளை என்று . மேலும் பாமக தலைவரும், நிறுவனருமான ராமதாஸ் அவர்கள் அவருடைய குடும்ப விசயத்தை பொது வெளியில் கொண்டு வந்தது தவறு என்று பிரேமலதா அவர்கள் பேசியுள்ளார் .