Velmurugan s | Published: Apr 8, 2025, 10:00 PM IST
ADMK MLAs wear black shirts : டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை 1000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்ததையடுத்து, அதிமுக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டசபைக்கு அதிமுக உறுப்பினர்கள் அந்த தியாகி யார் என்ற பேட்ஜ் உடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் கருப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவினரை விமர்சித்தார்,