தங்க கடத்தல் வழக்கு : நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு ஜாமீன் இன்றி சிறை தண்டனை விதிப்பு

Published : Apr 27, 2025, 08:11 AM IST

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
தங்க கடத்தல் வழக்கு : நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு ஜாமீன் இன்றி சிறை தண்டனை விதிப்பு

Actress Ranya Rao Booked under COFEPOSA Act : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட டிஜிபி-யின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ் மற்றும் அவரது இரு நண்பர்கள் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் COFEPOSA சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், ரன்யா ராவ், அவரது நண்பர்களான நடிகர் தருண் மற்றும் சாஹில் ஜெயின் ஆகியோர் ஒரு வருடம் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்க நேரிடும். நடிகை ரன்யா ராவ், தமிழில் வாகா என்கிற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர் ஆவார்.

24
Ranya Rao Gold Case

14 கிலோ தங்கம் கடத்திய ரன்யா ராவ்

கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 14.1 கிலோ தங்கத்தை கடத்த முயன்றபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா கைது செய்யப்பட்டார். விசாரணையில், ரூ.43 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளைக் கடத்தியது தெரியவந்தது. இந்தக் கடத்தலுக்கு உதவியதாக அவரது நண்பர் தருண் மற்றும் பெல்லாரி நகை வியாபாரி சாஹில் ஜெயின் ஆகியோரையும் டிஆர்ஐ கைது செய்தது. 

இதையும் படியுங்கள்... தங்கம் வாங்க ஹவாலா பணத்தை பயன்படுத்தியதாக நடிகை ரன்யா ராவ் ஒப்புதல் வாக்குமூலம்!

34
Ranya Rao Arrested

ரன்யா ராவ் மீது COFEPOSA சட்டம் பாய்ந்தது

இந்தக் குற்றத்தை டிஆர்ஐ அதிகாரிகள் கடுமையாகக் கருதி, ரன்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது COFEPOSA சட்டத்தைப் பதிவு செய்ய மத்திய பொருளாதார புலனாய்வு வாரியத்திற்குப் பரிந்துரை செய்தனர். இந்தப் பரிந்துரையை வாரியம் ஏற்றுக்கொண்டதையடுத்து, குற்றவாளிகள் மீது COFEPOSA சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ்வை கடந்த நான்கு மாதங்களில் சுமார் ரூ.38.39 கோடியை ஹவாலா மூலம் துபாய்க்கு அனுப்பி 49.6 கிலோ தங்கம் வாங்கியுள்ளார் அவரது நண்பர் சாஹில் ஜெயின். 

44
Ranya Rao Jailed for One Year

ரன்யா ராவ் சிக்கியது எப்படி?

அதை பெங்களூருக்குக் கொண்டு வந்து சாஹில் ஜெயின் விற்பனை செய்ததும்  டிஆர்ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் துபாய்க்கு ரூ.38.39 கோடி ஹவாலா பணத்தை அனுப்ப ரன்யாவுக்கு உதவியதாகவும், பெங்களூருவில் 5 தவணைகளாக அவருக்கு ரூ.1.7 கோடியை ஹவாலா மூலம் வழங்கியதாகவும் சாஹில் ஜெயின் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலை டிஆர்ஐ நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் அவர்கள் மூவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... 

Read more Photos on
click me!

Recommended Stories