vuukle one pixel image

வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

vinoth kumar  | Published: Oct 25, 2024, 1:04 PM IST

வேலூர் காட்டிபாடியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை செல்ல முயன்ற திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் உடனை அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிர கண்காணித்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.