போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..

Published : Sep 25, 2022, 03:29 PM IST

உலக இருதய தினம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, நெல்லையில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
 

அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க:15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய மாரத்தான  ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை, ஆட்சியர் மாளிகை, சேவியர் கல்லூரி, ஆயுதப்படை சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவு பெற்றது.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். பின்னர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
Read more