vuukle one pixel image

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு !

Velmurugan s  | Published: Apr 8, 2025, 2:00 PM IST

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது.