பஹல்காம் தாக்குதல்! களமிறங்கிய என்ஐஏ! சாட்சிகளிடம் விசாரணை!

Published : Apr 27, 2025, 11:00 AM IST
பஹல்காம் தாக்குதல்! களமிறங்கிய என்ஐஏ! சாட்சிகளிடம் விசாரணை!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது. சாட்சிகளிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.

NIA started investigation Pahalgam incident: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (Nஈஆ) ஒப்படைத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு (CTCR) பிரிவின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு புதிய FIR ஐப் பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பிறகு என்ஐஏயிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NIA விசாரணை தொடக்கம் 

இதனைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தை முழுமையாக மதிப்பீடு செய்து, தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, படுகொலைக்கு காரணமானவர்களை அடையாளம் காண NIA குழு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ள NIA குழுக்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து இந்தியாவுடன் இணையுங்கள்! பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்!

சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம் 

''அமைதியான மற்றும் அழகிய பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த கொடூரமான தாக்குதலைக் கண்ட சாட்சிககளிடம் விசாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை ஒன்றாக இணைக்க சாட்சிகளிடம் மிகச்சிறிய விவரங்களில் விசாரிக்கப்படுகிறது'' என்று என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஒரு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இந்தக் குழுக்களை மேற்பார்வையிடுகின்றனர்.

காஷ்மீர் நோக்கி படையெடுக்கும் பாகிஸ்தான் இராணுவம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!