ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு

Published : Apr 27, 2025, 10:56 AM IST

2025 கோடை விடுமுறைக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு குலுக்கல் முறையில் இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படும்.

PREV
15
ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு

Free travel on government buses for a year : வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக பகல் வேளைகளில் வீட்டிலிருந்து வெளியே வரவே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், குளுமையான பகுதிகளுக்கும் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

25
summer vacation travel

கோடைகால பயணம்- ஜாக்பாட் அறிவிப்பு

அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

இதன் படி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01.04.2025 முதல் 15.06.2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில்,

35
Government bus free travel

75 பயணிகளுக்கு பரிசு

75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பரிசு 25 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடக்கிற்கு 20 முறை இவைச பயணம் (1.07.2025 முதல் 30.06.2026 வரை)

45
Free bus travel

ஒரு வருடத்திற்கு இலவச பயணம்

இரண்டாம் பரிசு 25 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருத்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.06.2026 வரை

மூன்றாம் பரிசு 25 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து  05 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.06.2026 வரை)

55
Online ticket booking

முன்பதிவு செய்து பயணியுங்கள்- பரிசை வெல்லுங்கள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம்! முன்பதிவு செய்ய: www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தவும் எனஅந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories