86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- வருவாய் துறை புதிய அறிவிப்பு

Published : Apr 27, 2025, 10:12 AM ISTUpdated : Apr 27, 2025, 10:13 AM IST

சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 

PREV
14
 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- வருவாய் துறை புதிய அறிவிப்பு

Patta land income limit increase : சென்னையை சுற்றியுள்ள, 'பெல்ட் ஏரியா' எனப்படும் புறநகர் பகுதிகள், பிற மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் 32 கிலோ மீட்டர்  பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடர்பாக,

24
land allotment

86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா

கடந்த பிப்.10-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, சென்னையில் மட்டும் ஆட்சேபமற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேரும், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என, 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதற்கான வழிகாட்டி விதிமுறைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதில், குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமான வரம்பு உள்ளிட்ட சில விதிகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வந்ததால், திருத்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. 

34
Register Office

வருமான உச்ச வரம்பு

இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 17ம்  நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் வழிமுறைகளில் திருத்தம்  வருவாய் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  இதன்படி, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாயாக இருந்தது.

இந்த வரம்பு தற்போது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாயாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.

44
Income limit increase

வருமான உச்ச வரம்பு 5லட்சமாக உயர்வு

 அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது; மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல், 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்  என்று அரசாணையால் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories