சர்வதேச யோகா திருவிழாவுக்கு ஹிந்தியில் வைக்கப்பட்ட பேனர்...கருப்பு மை பூசி அழிப்பு !

Published : May 26, 2025, 10:00 PM IST

புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த பேனர்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. இதற்கு புதுச்சேரியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ள புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழாவுக்கு தமிழ் முழுவதும் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து,தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சிக்னல், அஜந்தா சிக்னல், இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை கருப்பு மை பூசி அழித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர் இதனால் புதுச்சேரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

04:34பள்ளிப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் காலை உணவுத் திட்டம் : கிருஷ்ணகிரி பள்ளியிலிருந்து நேரடி பதிவுகள்
04:03குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.....ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !
05:49காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம்: அமைச்சர் எஸ். ரமேஷ் பேட்டி
07:10கீழடி அறிக்கையை முடக்க பாஜக அரசு முயற்சி" – மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
06:55ஜெம் கிரானைட்ஸ் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே பாய்கிறது: திமுக நிர்வாகி ரகுபதி விளக்கம்
09:30வீடியோ ஷேடோவாக இருந்தது என ரகுபதிக்கு யார் சொன்னது? – பாஜக சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி
05:05"ஜோசியம் பார்த்து ஆட்சி நடத்துறீங்களா?" - சீமான் கடுமையான தாக்கு!
03:54ஒருத்தரை வந்து விமர்சனம் செய்றதுக்கு கூட அருகதை வேணும் ! திருமாவளவனை தாக்கி பேசிய நாராயணன் திருப்பதி
03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !