Velmurugan s | Published: Mar 20, 2025, 2:00 PM IST
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு காரில் சென்றார். அப்போது அவர் இளையான்குடிக்குள் செல்ல முற்பட்ட போது, அவரை இளையான்குடி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். நகருக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்