குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.! உறக்கத்தைக் கலைத்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடுக- அன்புமணி

மதுரையில் ரவுடி காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Anbumani condemns serial killings in Tamil Nadu kak

Tamilnadu Law and Order : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. நேற்று காரைக்குடியில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் இன்று மதுரையில் கொலை நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவங்களை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த  தனக்கன்குளத்தைச் சேர்ந்த  காளீஸ்வரன் என்ற ரவுடி  நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

Latest Videos

தமிழகத்தில் தொடரும் கொலைகள்

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி  வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.  காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில்  இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும்  தெரிகிறது.

திசை திருப்பும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி  சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட,  சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

தூக்கம் கலைத்து நடவடிக்கை எடுங்கள்

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள்  நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது  திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

vuukle one pixel image
click me!