தமிழகத்தில் தொடரும் கூலிப்படைகள் மூலம் கொலைகள்.! அச்சத்தில் மக்கள்- கார்த்தி சிதம்பரம்

தொகுதி சீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Karti Chidambaram says people are in fear due to the ongoing killings in Tamil Nadu KAK

Tamilnadu Law And Order karti chidambaram : தொகுதி சீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசு சார்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசகளை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும், 888 ஆக உயர்த்தினால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், 

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

Latest Videos

இப்பவே பேச வாய்ப்பு இல்லை

ஆனால் வடமாநிலத்தின் பிரதிநிதித்துவம் கூடும்.  தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும், 25 ஆண்டுகளின் இதே நிலை தொடர வேண்டும் என்ற முதல்வரின் கருத்து வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார். 543 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையிலேயே எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காத நிலையில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், விவாதம் செய்ய முடியாது இது கூடிகளையும் ஒரு கூட்டமாகவே அமையும் என தெரிவித்தார்.

இரண்டு மொழியை படிக்கட்டும்

தமிழகத்தில் பாஜகவுடன் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டணி வைத்துக் கொள்ளாது, பாஜகவின் இந்தி மற்றும் இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இரண்டு மொழியை முழுமையாக படித்தபின்னர் மூன்றாவது மொழியைபற்றி பேசலாம் தமிழகமக்கள் மூன்றாவது முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த வடமாநிலங்களில் மூன்று மொழியில் பேசுகிறார்கள் என மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும் என தெரிவித்தார்.

தொடரும் கொலைகள்

இந்தியாவிலேயே மோசமான விமான நிலையம் சென்னை விமான நிலையம் தான், தனியார் மயமாக்கினால் இன்னும் ப்ரொபஷனலாக நடத்துவார்கள், எனவே சென்னை விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கவேண்டும் என்றார். காரைக்குடியில் கூலிப்படையை கொண்டு ஒரு திட்டமிட்ட கொலை நடைபெற்றுள்ளது, அதேபோன்று நெல்லையில் முன்னாள் காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார், இது போன்ற செயல்கள் தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தேர்தலுக்கு முன்பு அமலாக்கத்துறை அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள், தேர்தல் வரும்போது அமலாக்கத்துறை ஆக்டிவாக செயல்படும் என கூறினார். 

vuukle one pixel image
click me!